Cook with Comali 4: குக் வித் கோமாளிக்கு கம்பேக் கொடுத்த மணிமேகலை.. குஷியான ரசிகர்கள்..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4ல் இருந்து வெளியேறி ஷாக் கொடுத்த மணிமேகலை தற்போது ரீ என்ட்ரி கொடுத்து இன்ப அதிர்ச்சி தர இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4ல் இருந்து வெளியேறி ஷாக் கொடுத்த மணிமேகலை தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களும் அதிகரித்துள்ளனர்.
குக் வித் கோமாளி:
ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தனக்கென ஒரு டிஆர்பி ரேட்டிங்கை பிடித்து டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்கடேஷ் பட், செஃப் தாமோதரன் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த 4வது சீசனும் எப்போதும்போல் 10 குக்குகளுடன் தொடங்கியது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்தார் சிவாங்கி. இந்நிலையில் முந்தைய சீசன்களில் பங்கேற்று திடீரென விலகிப்போன மணிமேகலை ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான இந்த வார குக் வித் கோமாளி எபிஸோடுக்கான ப்ரோமோவில் மணிமேகலை இந்த வாரம் கோமாளியாக அல்லாமல் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார் என்பது தெரிய வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் போர் தொழில் படக்குழு சார்பில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இந்த வார எபிசோடில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
View this post on Instagram
மணிமேகலையின் பயணம்:
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், மணிமேகலை. 12 வருடங்களாக திரையில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு ஹுசைன் சாதிக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் மணிமேகலை பெற்றுள்ளார்
அவ்வப்போது சில மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். குக் வித் கோமாளியில் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்து வந்தார். தற்போது அதிலிருந்து மணிமேகலை விலகினார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரது ரசிகர்கள் பலர் இதற்கு காரணம் கேட்டு வந்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், ஒரு வேளை இவர் கர்ப்பமாக இருபாரோ என்ற பேச்சும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மணிமேகலை தனது புதிய பண்ணை வீட்டிற்கு பூமி பூஜை செய்துள்ளார். எல்லாவற்றையும் அறிவிக்கும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து திடீரென ஏன் விலகினார் என்பது மட்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
ப்ரோமோ வீடியோவுக்கான லிங்க்: