OTT-இல் விரைவில் வெளியாகிறது இயக்குநர் மணிரத்னத்தின் கிளாசிக் படங்கள்..
இயக்குநர் மணிரத்னத்தின் 26 கிளாசிக் திரைப்படங்கள் தற்பொழுது OTT-இல் வெளியாக உள்ளது .
பகல் நிலவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகம் ஆனவர் இயக்குநர் மணிரத்னம். மௌனராகம், தளபதி, நாயகன், அலைபாயுதே பம்பாய் போன்ற அடுத்த அடுத்த ஹிட் கொடுத்து தனக்கென்றே ஒரு இடத்தை பிடித்த இயக்குநர் மணிரத்னம். 90-ஸ் கிட்ஸின் மிகவும் பிடித்த இயக்குநர் பட்டியலில் கட்டாய இடத்தைப் பிடிப்பவர் மணி.
காதலை ஒவ்வொரு தருணத்திலும் மிக அழகான கதைகளுடன் வடிவமைப்பதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு . பிசி ஸ்ரீராம் , மணிரத்னம் காம்போவில் வந்த அனைத்து படங்களும் 90-இல் வைரல் ஹிட் ஆனது . தற்பொழுது 80-இல் தொடங்கி 90 வரை இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்கள் தற்பொழுது டிஜிட்டலைஸ்டு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த 26 படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. இதன் பணிகள் தற்பொழுது மிக பிரபலமான ஸ்டுடியோ ஒன்றில் நடைபெறுகிறது என்ற தகவலும் வெளியாகவுள்ளது . இதனை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக கூடும் .