Parvathy Thirovothu: போனில் ஆபாச பேச்சு..பார்சலோடு வீட்டிற்கு வந்த நபர்.. பார் வீட்டில் சிக்கிய சார்!
மலையாள பிரபல நடிகை பார்வதியை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, வீட்டிற்கு பார்சலோடு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பார்வதி. மலையாளத்தில் ‘அவுட் ஆஃப் சிலபஸ்’ படம் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை பார்வதி தொடர்ந்து தில் சார்லி, கூடே, உயரே, ஆர்க்கறியாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தில் அறிமுகமான பார்வதி, தனுஷ் நடித்த மரியான், மலையாள ரீமேக்கான பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்தார் . இவை தவிர ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பார்வதியை தொடர்பு கொண்ட ஒருவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி அவரை தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமன்றி பார்வதியை பார்ப்பதற்காக உணவு பார்சலோடு அவர் வீட்டிற்கும் அவர் வந்துள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில் இது குறித்து மரடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த நபரை கைது செய்த போலீசார் 354 D பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கொல்லத்தைச் சேர்ந்த அப்சல் (34) என்பது தெரிய வந்தது. ஆனால் கைது செய்த சிறிது நேரத்திலேயே அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மலையாள சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

