மேலும் அறிய

விவாகரத்துக்குப் பின்னர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சிரமப்பட்டேன்: மமதி சாரி

1990களின் பிற்பகுதியில் காலை எழுந்தவுடன் விஜய் டிவியைப் பார்த்தால் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அறிவுப்பூர்வமான தகவல்களுடன் வந்து ஜொலிப்பார் மமதி சாரி.

1990களின் பிற்பகுதியில் காலை எழுந்தவுடன் விஜய் டிவியைப் பார்த்தால் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அறிவுப்பூர்வமான தகவல்களுடன் வந்து ஜொலிப்பார் மமதி சாரி.

இப்போது இருக்கும் தொகுப்பாளினிகள் எல்லோருக்கும் இவர் தான் ஆசான் என்று சொன்னாலும் அது மிகையல்ல. அப்படிப்பட்டவர் திடீரென ஜிகினா உலகில் இருந்து காணாமல் போனார். காரணம் மணமுறிவு. ஊடக வெளிச்சத்தில் இருக்கும் பல பெண்களுக்கும் நடப்பதுதான் தனது வாழ்விலும் நடந்துவிட்டதாகக் கூறியுள்ளார் சாரி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹலோ தமிழகம் என்ற நிகழ்ச்சி மமதியை மக்களிடம் கொண்டு சேர்த்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், ஒருகாலத்தில் ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டிருந்தவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் வரவேற்கப்படவில்லை. இதனால் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றபட்டார். 

விவாகரத்துக்குப் பின்னர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சிரமப்பட்டேன்: மமதி சாரி

இந்நிலையில் தான் அண்மையில், அவர் தனது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர் பேசியதாவது: என் சொந்த ஊர் சென்னை தான். நான் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். அவர் மனைவி எனக்கு நன்றாக அறிமுகமானவர் தான். என் தோழியின் அனுமதி பெற்றே நான் திருமணம் செய்து கொண்டேன்.

ஆரம்ப காலத்தில் எங்கள் உறவு அன்பால் நிறைந்து இருந்தது. லிவிங் டூ கெதரில் ஆரம்பித்த எனது வாழ்க்கை திருமணமாக உருவெடுத்தது. மொத்தம் 12 ஆண்டுகள் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். அதன் பின்னர் 2014 ஆண்டு எங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

நாங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பிரியவில்லை. 12 ஆண்டுகள் வாழ்ந்தோம். அதை நீட்டிக்க எவ்வளவோ முயன்றோம். ஆனால் முடியவில்லை. அதன்பின்னரே பிரிந்தோம். சண்டை போட்டுக் கொண்டே வாழாதீர்கள். அது உங்கள் சந்ததிகளுக்கும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

நான் இன்றும் எனது முன்னாள் கணவரை நேசிக்கிறேன். அதனால்தான் அந்தப் பிரிவில் இருந்து வெளிவர நாளானது. நான் எனது நிறுவன வேலை, மீடியா வேலை என்று எல்லாவற்றையும் உதறி இருந்த காலம் என்பதால் சற்றே கலங்கியிருந்தேன். வேலை பார்த்தால் தான் பிழைக்க முடியும் என்ற சூழல். எனக்காகவும், என் நாய்க்குட்டிகளுக்காகவும், பூனைக் குட்டிகளக்குகாகவும் வேலை செய்தேன். பூனைக்குட்டிகளுக்காகவும் வேலைக்கு செல்ல திட்டமிட்டேன்.

எழுத்தாளர் ஆவது எனது கனவு:

என் வாழ்க்கையில் இரண்டு கனவுகள் இருந்தன. ஒன்று நியூரோ சர்ஜன் ஆக வேண்டும் என்பது. அது ஏதோ சில பல காரணங்களால் என் வாழ்வில் நடக்காமல் போனது. எனது இரண்டாவது கனவு எழுத்தாளராக வேண்டும் என்பது. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. கடவுள் ஒருவருக்கு எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போது செய்து கொடுப்பார். எனக்கு இப்போது ஹெச்.ஆர். வேலை கிடைத்துள்ளது. என் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது.

இவ்வாறு மமதி சாரி கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget