"பொதுவாக என் மனசு முதல் சிங்கம் ஒன்று புறப்பட்டதே" வரை! ரஜினிக்கு மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் பாடல்கள் பலவற்றை மறைந்த மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அதன் விவரங்களை கீழே காணலாம்.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இந்தியா முழுவதும் பிரபல நடிகராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடல் நேற்று வெளியானது.
மனசிலாயோ பாடலில் மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெறச் செய்துள்ளனர். ரஜினிகாந்தை சாமானிய மக்கள் வரை கொண்டு சென்றதில் அவரின் பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த வகையில் ரஜினிகாந்தின் திரை வாழ்வில் அவருக்கு மெகாஹிட் ஆன பாடல்களை பாடிய இருவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், மலேசியா வாசுதேவனும் ஆவார்.
ரஜினிகாந்திற்காக மலேசியா வாசுதேவன் பாடி இன்றளவும் ரசிக்கும் பாடல்களின் பட்டியலை காணலாம்.
- பொதுவாக என் மனசு தங்கம் ( முரட்டுக்காளை -1980)
- ஆகாய கங்கை ( தர்மயுத்தம் -1979)
- வெத்தலய போட்டேன்டி ( பில்லா – 1980)
- போக்கிரிக்கு போக்கிரி ராஜா ( போக்கிரி ராஜா - 1981)
- தங்கங்களே தம்பிகளே ( தில்லுமுல்லு - 1981)
- பட்டுக்கோட்டை அம்மாளே ( ரங்கா – 1982)
- ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ( தர்மயுத்தம் -1979)
- ஆப்பக்கடை அன்னக்கிளி ( பாயும் புலி – 1983)
- பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் ( பாயும் புலி – 1983)
- சொல்லி அடிப்பேனடி ( படிக்காதவன் -1985)
- என்னம்மா கண்ணு சௌக்யமா ( மிஸ்டர் பாரத் – 1986)
- நீ கொடுத்தத திருப்பிக் கொடுத்தா ( மாவீரன் – 1986)
- மனிதன் மனிதன் ( மனிதன் -1987)
- பெத்து எடுத்தவதான் ( வேலைக்காரன் – 1987)
- என்னோட ராசி நல்ல ராசி ( மாப்பிள்ளை – 1989)
- சிங்கம் ஒன்று புறப்பட்டதே ( அருணாச்சலம் – 1997)
1979ம் ஆண்டு முதல் பெரும்பாலான ரஜினிகாந்தின் படங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடிக்கொண்டு இருந்தார். கடைசியாக ரஜினிகாந்திற்காக அவர் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடலை பாடியிருந்தார். தற்போது ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் மட்டுமின்றி 80, 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு என பலருக்கும் பல பாடல்களை பாடியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மலேசியா வாசுதேவன் 2011ம் ஆண்டு காலமானார். பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1977ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்துள்ளார்.