Director Siddique: விஜய் பட இயக்குநருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் சோகம்..
இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து 1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆ நேரம் அல்ப தூரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்திக்.
பிரபல மலையாள இயக்குநர் சித்திக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்து 1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆ நேரம் அல்ப தூரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்திக். இவர் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சுபாஷ், ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வைகை எக்ஸ்பிரஸ், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு ராமோஜி ராவ் ஸ்பீஜிங் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன் பின்னர் இன் ஹரிகார் நகர், காட்ஃபாத, காசர்கோடு காதர்பாய், திருத்தல்வாடி, கூனுகிட்டா கோழி, அசுரவம்சம், சத்யமேவ ஜெயதே, ப்ரண்ட்ஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல், லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன், பாடி கார்ட், பிக் பிரதர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.
அதேசமயம் 2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, பிரசன்னா நடித்த சாது மிரண்டா, விஜய் நடித்த காவலன், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களையும் சித்திக் இயக்கியுள்ளார். தற்போது வித் இன் செக்ண்ட்ஸ், வாய் ஆஃப் சத்யநாதன், ராம் ஆகிய படங்களில் நடித்து வரும் சித்திக், மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக உள்ளார். மலையாளம், தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு படங்களையும் சித்திக் இயக்கியுள்ளார்.
இப்படியான நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சித்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில், சித்திக் மீண்டும் உடல் நலம் பெற்று வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க..