Sreenivasan: காலையிலேயே சோகம்.. பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தவர். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மலையாள சினிமாவின் மூத்த நடிகராக அறியப்பட்ட ஸ்ரீனிவாசன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்தவர். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சனிக்கிழமை (டிசம்பர் 20) அதிகாலையில் உதயம்பேரூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலப் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் அவரை திருப்புனித்துராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாள சினிமாவுக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
ஸ்ரீனிவாசனின் வாழ்க்கை வரலாறு
கேரளா மாநிலம் தலச்சேரிக்கு அருகிலுள்ள பட்டியத்தில் 1956 ஏப்ரல் 6 ஆம் தேதி ஸ்ரீனிவாசன் பிறந்தார். இவரின் தந்தை ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். கதிரூரில் பள்ளிப் படிப்பை முடித்த ஸ்ரீனிவாசன், சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்படப் பயிற்சி பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மட்டனூரில் உள்ள PRNSS கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
മലയാളികളുടെ സ്വന്തം ദാസനും വിജയനും ❤️#Mohanlal - #Sreenivasan ❤️@Mohanlal pic.twitter.com/Q4SysvosWX
— Abhishek Boby (@A_Boby_) August 7, 2022
1977 ஆம் ஆண்டு பி.ஏ. பக்கரின் மணிமுழக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் இன்றளவும் மலையாள சினிமாவின் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளில் அவர் 225 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது படங்களில் காமெடியுடன் சமூக கருத்தைகளையும் வெளிப்படுத்துவார். மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் கதை, திரைக்கதை எழுதிய பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 6 முறை கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். அவர் தமிழில் கூட பிரியதர்ஷன் இயக்கிய “லேசா லேசா” படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.
சினிமாவில் இரு மகன்கள்
இவருக்கு வினீத் ஸ்ரீனிவாசன், தயான் ஸ்ரீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் திரைத்துறையில் வளரும் கலைஞர்களாக இருக்கின்றனர். வினீத் சைக்கிள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தந்தை ஸ்ரீனிவாசனுடன் மகாண்டே அச்சன் என்ற படத்தில் நடித்தார். மேலும் கிட்டதட்ட 10 வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
இரண்டாவது மகனான தியான், நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என அப்பாவைப் போல பல துறைகளிலும் சாதனைப் படைத்துள்ளார்.





















