Watch video : ‛கஜினி , காக்க காக்க... இரண்டுமே நான் ரிஜக்ட் பண்ண படம்’ சூர்யாவிடம் சீக்ரெட்டை பகிர்ந்த மாதவன் !
"அந்த படத்தில் நீங்கள் போட்ட எஃபர்ட்டை கண்டு நான் வியந்துப்போனேன். ஒரு வாரம் உப்பே சாப்பிடாமல் , சிக்ஸ் பேக்லாம் வச்சு , மிகப்பெரிய விஷயம் பண்ணிட்டீங்க!."
மாதவன் சூர்யா நட்பு :
அலைபாயுதே திரைப்படம் மூல அறிமுகமானவர் நடிகர் மாதவன். இவருக்கும் நடிகர் சூர்யாவுக்குமான நட்பு வெளியுலகம் அறியாதது. பொதுவாக திரைத்துறையில் நண்பர்களை வைத்துக்கொள்ள விரும்பாத மாதவன் , சூர்யாவை தனது சிறந்த நண்பன் , என் இக்கட்டான காலக்கட்டத்திலும் உடன் இருந்தவர் என கூறுகிறார். நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யா நடித்த பொழுது மாதவன் எப்படி நடிக்க வேண்டும் என சில டிப்ஸ்களை கூட சூர்யாவிற்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்.மாதவன் சூர்யா இருவருமே ஆயுத எழுத்து திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது மாதவன் இயக்கிய ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து கொடுத்திருக்கிறார். அது ஒரு சிறப்பு தோற்றம்தான். ஆனாலும் அந்த காட்சியில் நடிக்க சூர்யா எந்தவொரு சம்பளமும் வாங்கவில்லை. சொந்த செலவில்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்றதாகவும் மாதவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெருமிதமாக கூறியிருந்தார்.
View this post on Instagram
கஜினி படம் பற்றி மாதவன் :
மாதவன் தற்போது இயக்கிய ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் நஷ்டத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் மாதவன் நடிகர் சூர்யாவுடன் லைவில் உரையாடினார். அப்போது சூர்யாவுடனான நட்பு மற்றும் அவரது கடின உழைப்பு குறித்து வெகுவாக பாராட்டியிருந்தார். கூடுதலாக சூர்யாவிற்கே தெரியாத ஒரு சுவாரஸ்ய விஷயத்தையும் பகிர்ந்துக்கொண்டார். அதாவது முருகதாஸ் கஜினி திரைப்படத்தில் நடிக்க முதன் முதலில் என்னைத்தான் அனுகியினார். ஆனால் இரண்டாவது பாகம் பிடிக்கவில்லை என்று நான் அதனை நிராகரித்து விட்டேன். அது சுற்றி சுற்றி உங்களிடம் வந்துவிட்டது சூர்யா. அந்த படத்தில் நீங்கள் போட்ட எஃபர்ட்டை கண்டு நான் வியந்துப்போனேன். ஒரு வாரம் உப்பே சாப்பிடாமல் , சிக்ஸ் பேக்லாம் வச்சு , மிகப்பெரிய விஷயம் பண்ணிட்டீங்க!. ஏற்கனவே எனக்கு வந்த காக்க காக்க திரைப்படத்திலேயே நீங்க யாருனு நிரூபிச்சுட்டீங்க.அதன் பிறகுதான் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் , ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு . நான் நேருக்கு நேர் படத்துல பண்ணின அட்வைஸ் அதுக்கு பிறகு எனக்கு தேவைப்பட்டது. நீங்க ஒரு பக்கம் அறக்கட்டளை , மறுபக்கம் சினிமா எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணுறது பெரிய விஷயம் . “ என சூர்யாவை வெகுவாக பாராட்டியிருக்கிரார் மாதவன் .