Maaveeran: தகாத வார்த்தையில் திட்டி மீம்ஸ்.. கமெண்டில் நன்றி சொன்ன மாவீரன் பட நடிகர்..
மாவீரன் படத்தின் நடித்துள்ள மதன் குமார் இணையத்தில் திட்டி பதிவிடப்பட்ட மீம்ஸ்க்கு நன்றி தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
மாவீரன் படத்தின் நடித்துள்ள மதன் குமார் இணையத்தில் திட்டி பதிவிடப்பட்ட மீம்ஸ்க்கு நன்றி தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
இணையத்தில் கடும் விமர்சனம்
தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் ஒருவரை பாராட்டவும், திட்டவும், விமர்சனங்களை முன்வைக்கவும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக சமூக வலைத்தளங்கள் உள்ளது. அதில் அரசியல், சினிமா பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டும். கிட்டதட்ட ஆதரவு தெரிவித்து ஒரு கூட்டமும், எதிர்ப்பு தெரிவித்து கூட்டமும் கருத்து மோதலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மதன்குமார் தட்சிணாமூர்த்தி. இந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து கர்ணன், மாமன்னன், ஏஜெண்ட் கண்ணாயிரம், அயோத்தி, ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸில் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் மதன் குமார் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இன்ஜீனியராக அவர் நடித்திருப்பார். குடித்து விட்டு, சிவகார்த்திகேயனுடன் பிரச்சினை பண்ணும் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் குடியிருப்பு மக்களை மதிக்காமல் அலட்சியமாக இவர் பேசும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கே செம டென்ஷனாகும் அளவுக்கு நடித்திருந்தார்.
மதன்குமாரை திட்டி மீம்ஸ்
இதனிடையே மதன்குமாரை திட்டி மீம்ஸ் ஒன்று பகிரப்பட்டது. அதில் அவர் நடித்த படங்களை குறிப்பிட்டு ‘எரிச்சல் தரும் ஃபார்முலாவை சிரமமின்றி தருபவர்’ என்ற வார்த்தைகளோடு திட்டி ஒரு தகாத வார்த்தையும் இடம் பெற்றிருந்தது. இந்த மீம்ஸ் இணையத்தில் வைரலான நிலையில், அந்த பதிவுக்கு மதன்குமார், 'உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையவாசிகள் இடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
வசூலை அள்ளும் மாவீரன் படம்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள மாவீரன் படம் வசூலில் ரூ.50 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.