வர்றேன் திரும்ப வர்றேன்... மாநாடு ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லரில் மாஸ் காட்டும் சிம்பு
ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லரில் , வர்றேன் திரும்ப வர்றேன் என சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே தற்போது வைரலாகியுள்ளது

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் படம் மாநாடு. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடித்துள்ளார். முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் சிம்பு கை கோர்த்திருப்பதாலும், time loop கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள்
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாநாடுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக இருந்த மாநாடு படம் சில காரணங்களால் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், ப்ரீ ரிலீஸும் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ட்ரெயலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ப்ரீ ரிலீஸ் ட்ரெய்லரில் , வர்றேன் திரும்ப வர்றேன் என சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே தற்போது வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது. ட்ரெய்லரை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
#MaanaaduPreReleaseTrailer
— Silambarasan TR (@SilambarasanTR_) November 19, 2021
▶️ https://t.co/amugeClDLp @thisisysr @vp_offl @sureshkamatchi @U1Records
முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, “எனக்கு நிறைய பிரச்சனை கொடுக்கிறார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bharathiraja Speech: ‛சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை’ கலாய்த்தாரா... பாராட்டினாரா பாரதிராஜா?
Watch Video | பிரச்சனை கொடுக்குறாங்க... மாநாடு திரைப்பட விழா மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு!
பாபா முதல் ஜெய்பீம் வரை.. அரசியல் தலைவர்களால் அழுத்தங்களை சந்தித்த நடிகர்கள்.. !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

