பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்
Snehan Father Passed Away : பாடலாசிரியர் மற்றும் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு கொடும்புறார் இன்று வயது மூப்பின் காலமாக காலமானார்

சினேகனின் தந்தை காலமானார்
பாடலாசிரியர் மற்றும் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு கொடும்புறார் இன்று வயது மூப்பின் காலமாக காலமானார். தனது தந்தயின் இறப்பு குறித்து சினேகன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது
"நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம் .எனது தந்தையார் சிவசங்கு கொடும்புறார் (வயது 102), இன்று (27-10-2025) அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார் என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன்.நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது 🙏
முகவரி: கவிஞர் இல்லம்,
புதுக்கரியப்பட்டி,
தஞ்சாவூர் மாவட்டம்.
திருச்சி to தஞ்சை நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது (புதுக்கரியப் பட்டி கிராமம்).





















