கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் செம என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்

Published by: ராகேஷ் தாரா

முதல் படத்திலேயே இயக்குநராக கமர்சியல் வெற்றியை பதிவு செய்த பிரதீப் அடுத்தபடியாக தான் இயக்கிய லவ் டுடே படத்தில் அவரே நாயகனாகவும் அறிமுகமானார்

தோற்றம் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் தனது தனித்துவமான நடிப்பால் லவ் டுடே படத்தில் இளம் ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இவர் நடித்த டிராகம் மற்றும் டியூட் ஆகிய இரு படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றியை பெற்றுள்ளன

பிரதீப் ரங்கநாதன் நடித்த 3 படங்களின் பட்ஜெட் மற்றும் வசூல் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்

லவ் டுடே திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் ரூ 100 கோடி வசூலித்தது

இந்த ஆண்டு தொக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி 26 நாட்களில் உலகளவில் 15ஒ கோடி வசூல் செய்தது

தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான டியூட் திரைப்படம் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது

மூன்றே படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் இவரது படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருவதால் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்

தென் இந்திய சினிமாவின் வசூல் டிராகன் என பலர் இவருக்கு பட்டம் வைத்துள்ளார்கள்