மேலும் அறிய

Watch Video: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் செய்யும் விஷ்ணு விஷால்: வெளியான லால் சலாம் பாடல் மேக்கிங் வீடியோ!

Watch Video : 'லால் சலாம்' படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கபிலன் வரிகளுக்கு சித் ஸ்ரீராம் பாடிய 'ஏ புள்ள' பாடலின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். மேலும் ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

 

Watch Video: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் செய்யும் விஷ்ணு விஷால்: வெளியான லால் சலாம் பாடல் மேக்கிங் வீடியோ!
ரசிகர்களின் எதிர்பார்ப்பு :

'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில், அதில் ரஜினியின் மாஸான என்ட்ரி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. 

 

Watch Video: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் செய்யும் விஷ்ணு விஷால்: வெளியான லால் சலாம் பாடல் மேக்கிங் வீடியோ!

எகிறும் வியூஸ் :

'லால் சலாம்' படத்தில் முதல் சிங்கிள் பாடலாக 'தேர் திருவிழா...' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஏ புள்ள' பாடல் வெளியானது. சித் ஸ்ரீராம் மயக்கும் குரலில் கிராமத்து மெலடியாக வெளியான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி வெளியானது. கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதி இருந்தார். கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது 'ஏ புள்ள' பாடல். ஒரு சில பாடல்கள் முதல் முறையே மக்களை கவர்ந்து விடும். இந்த மெலடி பாடலுக்கும் அந்த ரகத்தை தான் சேரும். 

 

Watch Video: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதல் செய்யும் விஷ்ணு விஷால்: வெளியான லால் சலாம் பாடல் மேக்கிங் வீடியோ!

மேக்கிங் வீடியோ :

'ஏ புள்ள' பாடலின் மேக்கிங் வீடியோவின் ஒரு பகுதியை லைகா நிறுவனம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது. அந்த அருமையான வரிகளுக்கும் இசைக்கும் பின்னால் ஒலிக்கும் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரல் ஒரு மேஜிக்கல் மொமெண்ட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தப் பாடலின் ட்ராக் எப்படி உயிர் பெற்றது என்பதற்கான ஒரு சிறிய வீடியோவை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @lycamusicin

ஜெயிலருக்கு டஃப் கொடுக்கிறது : 

'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் 700 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் தான் நடித்துள்ளார் என்றாலும், இது அவரின் படமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கான வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது. எனவே ஜெயிலர் படத்திற்கு டஃப் கொடுக்கத் தயாராகிவிட்டது லால் சலாம் திரைப்படம். 

தலைப்பு செய்திகள்

JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
"யாரிடமும் அனுமதிவாங்க தேவையில்லை.." துருவ் விக்ரமுடன் காதல் முறிவா? அனுபமா பதிவால் பரபரப்பு
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
AK 64 அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்
Kamal Haasan: அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!
அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள்.. தகுதியான அங்கீகாரம்.. கமல்ஹாசன் பெருமிதம்!

வீடியோ

CM விஜய்க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம்
குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Embed widget