மேலும் அறிய

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ட்ரெய்லரை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்க்கலாம்!

லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர்  மூலம் நமக்குத் தெரியவரும் தகவல்களைப் பார்க்கலாம்!

சாதுவான ஹீரோ

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில் அதிகமாக எமோஷன் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது கதையை நகர்த்துவதற்காக மட்டுமே பயண்படுத்தப்படும். ஆனால் லியோ ட்ரெய்லரைப் பார்க்கும் போது முழுக்க முழுக்க எமோஷனலான ஒரு கதையை பின்னணியாக வைத்து அதற்கு மேல் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை உருவாக்கி இருப்பது போல் தெரிகிறது.

 மிகப்பெரிய மாஸ் காட்சிகளுக்கு முன் நாம் முதலில் பார்ப்பது மிக சாதரணமான ஒரு விஜய். இந்த கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபன். தனது மனைவி (த்ரிஷா) மற்றும் மகளுடன் காஷ்மீரில் வசித்து வருகிறார்.

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

லியோ வேட்டை

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

இதே ஊரில் இருக்கும் இரு தரப்பு அந்தோணி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் கும்பல். இருவரும் அண்ணன் - தம்பிகளாக இருந்தும் எதிரிகளாக இருக்க வாய்ப்புகள் இருக்கலாம். பல்வேறு குற்றங்களை செய்து வரும் இவர்களை தட்டிக் கேட்க போலீஸாக வருபவர்தான் கெளதம் மேனன்.

இப்படியான நிலையில் அந்தோணி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் இவர்களின் கடைசி தம்பியான லியோ தாஸ் அனேகமாக இறந்துவிட்டதாக அனைவரும்  நம்பும் நிலையில், அவரை மாதிரியே இருக்கும் பார்த்தியை பார்க்கிறது இந்த இரண்டு கும்பலும்.

எல்லாரும் தேடி வரும் லியோ தாஸ் தனது அடையாளத்தை மறைத்து அனைவரையும் ஏமாற்றுவதாக நினைத்து அவனையும் அவனது குடும்பத்தையும் துரத்துகிறார்கள். எவ்வளவு விலகிப் போனாலும் தனது குடும்பத்தை துரத்தும் இந்த கொலைகார கும்பலில் இருந்து விடுபட, லியோவாகவே மாறுகிறாரா பார்த்தி என்பது தான் இந்த ட்ரெய்லரில் அனைவருக்கும் இருக்கும் கேள்வி!

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

அமைதியாக இருந்து போரினைத் தவிர்க்க வேண்டும், அமைதியாக இருந்து தப்பிக்க வேண்டும், அமைதியாக இருந்து, போருக்கு ஆயத்தம் ஆக வேண்டும், அமைதியாக இருந்து, சாத்தானை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாசகங்கள் முன்னதாக வெளியான போஸ்டரில் இடம்பெற்று இருந்தது. இதைக் காட்சிப்படுத்தும் வகையில், இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.

ஆல்டர் ஈகோ

அதே நேரத்தில் இது டபுள் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என நம்புகின்றனர். ஆனால், முதன்முதலாக வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது. உருவத்தை வைத்து தேடி வரும் பகைகளின் தொல்லை தாங்க முடியாமல் அல்லல்படும் பார்த்தியின் உள்மனதில் இருந்து, லியோ எனும் ஆல்டர் ஈகோ வெளியாகிறது என்பதே லோக்கியின் டச்சாக இருக்கலாம்.

மன்சூர் அலிகான்

லியோவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவருடன் இருந்த மன்சூர் அலிகான் மூலமாக மட்டுமே அது முடியலாம். சிறையில் லியோவைப் பற்றி தெரிந்துகொள்ள மன்சூர் அலிகானை பார்த்தி சந்திக்கலாம். அதன்பின் லியோ தாஸின் ஃப்ளாஷ்பேக் தெரிய வரலாம்!

மற்ற கதாபாத்திரங்கள்

மேலும் படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் அவர்கள் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை. இத்தனை நடிகர்கள் இருப்பதால் பெரும்பானாவர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

யார் இந்த லியோ?

Leo Trailer BreakDown: லியோவை ஏன் தேடுகிறது கொலைகார கும்பல்.. டபுள் ஆக்‌ஷனா, ஆட்லர் ஈகோவா.. லியோ ட்ரெய்லர் ஒரு அலசல்!

கடைசியாக நம் முன் இருக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஏன் லியோ தாஸை இந்த இரண்டு கும்பலும் வெறிப்பிடித்து தேடுகிறது. யார் இந்த லியோ?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Kaanum Pongal 2025: காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
காணும் பொங்கல்... ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Alanganallur Jallikattu 2025: செம்ம! ஜல்லிக்கட்டுப் பார்க்க வந்த மலேசியா மாற்றுத்திறனாளி! துணையாய் வந்த மனைவி!
Saif Ali Khan:
Saif Ali Khan: "அப்பா நவாப்! தாத்தா பாகிஸ்தான் ஜெனரல்!" மன்னர் பரம்பரையின் வாரிசு சைஃப் அலிகான்
Embed widget