(Source: ECI/ABP News/ABP Majha)
எதைக் கேட்டாலும் அதற்கு ஒரு தீர்வு கமல்சார் கிட்ட இருக்கும்! - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
எதைக் கேட்டாலும் அதற்கு ஒரு தீர்வு கமல்சார் கிட்ட இருக்கும் என்று வியப்புடன் பேசியுள்ளார் விக்ரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
எதைக் கேட்டாலும் அதற்கு ஒரு தீர்வு கமல்சார் கிட்ட இருக்கும் என்று வியப்புடன் பேசியுள்ளார் விக்ரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒருநாள் படப்பிடிப்புக்காக துப்பாக்கிகளைக் காட்டிக் கொண்டிருந்தேன். கமல் சாரிடம் துப்பாக்கிகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது M16 துப்பாக்கி மட்டும் தான் கிடைக்கவில்லை சார் என்றேன். ஏன் உங்களுக்கு அது வேண்டுமா என்றார். ஆவலுடன் ஆமாம் என்றேன். உதவியாளரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். ஒரு மணி நேரம் வெயிட் பண்ண முடியுமா என்றார். நிச்சயமாக என்றேன். ஒரு மணி நேரத்தில் ஒரு டேபிள் நிறைய துப்பாக்கிகள் இருந்தன. ஒரு குழந்தையை கடைக்குள் விட்டதுபோல் மகிழ்ச்சியானேன். எனக்குத் தேவையான இரண்டை எடுத்து அவரிடம் காட்டினேன். நீங்கள் ட்ரெய்லரில் அந்தத் துப்பாக்கியை பார்த்திருப்பீர்கள். கமல் சார் கிட்ட எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும்” என்றார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகிக்க உள்ளது. கடந்த வாரம் வெளியாகிய பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை சாடி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அந்த பாடலை கமல்ஹாசனே எழுதி, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பது எதிர்பார்ப்புகளைப் பன்மடங்கு கூட்டியுள்ளது. விக்ரம் படத்தில், முதல் பாடல் ரீலிசே, அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி, தற்போது விவாதப் பொருளாக சமூக தளங்களில் மாறிவிட்டது.
World Star கமல்ஹாசன், Trending Star விஜய் சேதுபதி, Malayalam Star ஃபகத் ஃபாசில் என மூன்று ஸ்டார்கள் சேர்ந்து கலக்கி இருக்கும் விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது போல், இந்தப் படத்திலும் கேங்ஸ்டராகத்தான் நடிக்கிறாராம். ஜெயிலுக்குள் செல்லும் விஜய்சேதுபதியை மீட்டெடுக்க, அந்த ஜெயிலுக்குள் ஃபகத் ஃபாசிலும் செல்கிறார், இவர்கள் இருவரின் அட்டகாசங்களையும் சதிகளையும் முறியடிப்பதற்காக, கமலும் அந்த ஜெயிலுக்குள் செல்கிறாராம். அதிலிருந்து, நடைபெறும் திடீர் திருப்பங்களும், இதுவரை கண்டிராத பயங்கர சண்டைக்காட்சிகளும், கண்கவர் பாடல்களும்தான் படமாம்.
அவுட் அன்ட் அவுட் ஆக்சன் த்ரில்லர் சினிமாவாக வந்திருக்கும் கமலின் விக்ரமில், சினிமாவின் சிறப்புகளுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
இந்நிலையில், எதைக் கேட்டாலும் அதற்கு ஒரு தீர்வு கமல்சார் கிட்ட இருக்கும் என்று வியப்புடன் பேசியுள்ளார் விக்ரம் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.