Liger Flop : லைகர் படத்தின் தோல்வி ஒரு திட்டமிட்ட சதி! வெளிப்படையாக வெளுத்து வாங்கிய விநியோகஸ்தர்!
லைகர் படத்தை தோல்வி அடிக்க வேண்டும் என்பது திட்டமிட்ட சதி, என படத்தின் தென் பகுதி விநியோகஸ்தர் - வாரங்கல் ஸ்ரீனு
விஜய தேவரகொண்டாவின் லைகர் படத்தை தோல்வி அடிக்க வேண்டும் என்பது திட்டமிட்ட சதி, என படத்தின் தென் பகுதி விநியோகஸ்தர் வாரங்கல் ஸ்ரீனு தெரிவித்துள்ளார்.
திரைக்கதையில் பலரின் எதிர்ப்பார்பை ஏமாற்றிய லைகர் படம் தனது முதல் வார பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் பயங்கர பின்னடைவை பெற்றது. கபாலி, ஐ ஸ்மார்ட் சங்கர், க்ராக் போன்ற ஹிட் படங்களை விநியோகம் செய்த வாரங்கல் ஸ்ரீனு லைகர் படத்தின் தோல்வியை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த ஒரு வருட காலத்தில், 100 கோடி ரூபாயை இழந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இழப்பை குறித்து பேசிய ஸ்ரீனு “ இல்லை 1 வருட காலத்தில் 100 கோடி ரூபாயை நான் இழக்கவில்லை. நான் நிறைய பணத்தை இழந்துள்ளேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை. லைகர் படத்தை பொறுத்தவரை, எனது 65 சதவீத முதலீட்டை இழந்துள்ளேன்” என்று கூறினார். பட ப்ரொமோஷனில் விஜய் தேவரகொண்டாவின் ஓவரான நம்பிக்கை இறுதியில் உதவாமல் போனது.
View this post on Instagram
பல ஏழை படக்குழுவினரின் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. இது போன்ற படங்கள் அனைத்தும் பல சிக்கல்களில் முடியும். இதனால் பல குடும்பங்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபடுகின்றனர். சோஷியல் மீடியாக்களில், எதற்கெடுத்தாலும் பேன், பேன் என்று சொல்கிறார்கள்.
இது எல்லாம் திட்டமிட்ட சதி என்றுதான் சொல்ல வேண்டும் . ஒரு படத்தை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் சரி, அது அப்படியே இருக்கட்டும். ஆனால் படம் ரிலீஸாவதற்கு முன்னரே எப்படி நீங்கள் அதை ஓரங்கட்டுவீர்கள் என்று கேள்வி கேட்டார்.
படம் எப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டதற்கு “எனக்கு படம் பிடித்து இருந்தது. ஆனால் கடைசி 7-10 நிமிடங்களில் வரும் காட்சி எனக்கு பிடிக்கவில்லை. படத்திற்கு சரியான க்ளைமாக்ஸ் இல்லை. எனது நண்பர்களும் குடும்பத்தினரும் இதையேதான் கூறினார்.” என்று பதில் ஸ்ரீனு பேசினார்.
மேலும் படிக்க :
வசூலில் மண்ணைக் கவ்விய லைகர் படம்...90% காட்சிகளை ரத்து செய்த தியேட்டர்கள்