மேலும் அறிய

15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளன.

அயன்


15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான படம் அயன். சூர்யா, தமன்னா , பிரபு, கருணாஸ், ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு  இசையமைத்தார். அயன் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துள்ளன

அயன் படத்தை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும் என்றால் Surprise என்று சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு வகையில் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தும் ஒன்றை படம் முழுவதும் வைத்திருப்பார் இயக்குநர் கே.வி.ஆனந்த் 

படத்தின் முதல் காட்சியில் விமானத்தில் இருந்து இறங்கும் சூர்யா எல்லாரிடமும் சகஜமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு புதுப்படத்தை மக்கள் ஏன் திரையரங்கில் பார்க்காமல் திருட்டுத்தனமாக பார்க்கிறார்கள் என்று பேசுவார். தேவாவாக நடித்திருக்கும் சூர்யா இந்த வசனங்களை பேசும்போது.. சரி ரொம்ப கன்னியமான ஒரு நாயகன் என்று நம்பியும் விடுவோம்.

ஆனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடி சென்னை தமிழ் பேசி ஒரு ஆச்சரியத்தை தூண்டுவார். அங்கு தொடங்கி படம் முழுவதும் இப்படி ஏதோ ஒரு வகையில் நம்மை ஆச்சரியப்படுத்தியபடியே செல்லும் திரைக்கதை. தண்ணீர் பாட்டிலில் பபுள் கம் ஒட்டி வைரம் கடத்துவது. தலையில் வைரத்தை கிரீடமாக அணிவது, ரொட்டி துண்டுகளில் தங்கத்தை பதுக்கி வைப்பது, கிழிந்த ரூபாய் நோட்டு, வயிற்றுக்குள் போதைப்பொருட்களை கடத்துவது , கொகெய்னில் செய்த பிள்ளையார் சிலை, இப்படி படத்தில் சலிப்பே இல்லாமல் புதுப் புது காட்சிகள் நம் கவனத்தை திசைத்திருப்பாமல் வைத்திருக்கும்.

போதைப்பொருள் கடத்தல் பற்றிய படம் என்றதும் எடுத்தவுடன் நேரடியாக கதைக்குள் சென்றுவிடாமல் திருட்டு டிவிடி யில் தொடங்கி , வைரம் , போதைப்பொருள் என படிப்படிப்படியாக நம்மை அந்த உலகத்திற்குள் கூட்டிச் செல்கிறது படம். ஆக்‌ஷம் படம்தானே என்று மேலோட்டமாக இல்லாமல் கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.


15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்

தேவா - தாஸ்  , தேவா - சிட்டி  , தேவா - கமலேஷ், தேவா - யமுனா. தாஸ் - கமலேஷ் இப்படி பல்வேறு காம்பினேஷன்களை உருவாக்கி குரு சிஷ்யன், தந்தை மகன், நட்பு , பகை, காதல்  என எல்லா உணர்ச்சிகளையும் படத்தில் கொண்டு வந்திருப்பார்கள்.

மீம்களாக உயிர்வாழும் வசனங்கள்


15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்

"யார நம்புறதுனே தெரில தாஸ் அண்ணா, லட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ்.. நட்டுல வச்சேன்" , "பய புடிச்சுட்டான்.. எல்லாம் டெக்னாலஜி" என்று பேசும் வசனம் என படத்தின் ஒவ்வொரு வசனமும் காட்சியும் மீம்களாக மாறி இருக்கின்றன.

படத்தின் நாயகனாக தேவா மிகப்பெரிய பலசாலி என்று காட்டுவதற்கு ஒரு சண்டைக்காட்சி வைக்காமல் அவனது அறிவு, அவன் திறமை , அவன் குடும்ப பின்புலம் என எல்லாம் சுவாரஸ்யமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.


15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்

பொதுவாக வடசென்னையை சேர்ந்தவன் என்றாலே கொலை , படிக்காதவன், முரடன் என்கிற வழக்கமான பொதுமைப்படுத்தல்களுக்கு மாறாக நன்றாக படித்த, உலக சினிமா அறிவு கொண்ட , சுய கட்டுப்பாடு உடைய ஒருவனாக தேவாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும்

இன்று வரும் ஆக்‌ஷன் படங்களில் ஹீரோயின் வெறும் செட் பீஸாக மட்டுமே நடத்தப்படுகிறார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நாயகியை எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அயன். 

தாஸாக வரும் பிரபு, கருணாஸ், ஜகன் , கமலேஷ் , பொன்வண்ணன் , தேவாவின் அம்மா என ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

ஸ்டண்ட் காட்சிகள்

அதே நேரத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு தனி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஸ்டண்ட் காட்சிகளை சூர்யா நிஜமாக செய்தார். மிகையான கற்பனை இல்லாமல் எதார்த்தமாகவும் அதே நேரத்தில் ஹாலிவுட் படங்களில் இருக்கும் நேர்த்தியுடனும் சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பின்னணி இசை

ஹாரிஸ் ஜெயராஜ் மிகவும் வெரைட்டியான ஒரு ஆல்பத்தை இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார். திடீரென்று ஒரு சண்டைக்காட்சியில் டிரம்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். கார் சேஸிங் காட்சியில் பிரம்மாண்டமான  ஆர்கெஸ்ட்ரா இசை பின்னணியாக ஒலிக்கும். மிக மாஸான சில காட்சிகளில் கிளர்ச்சியூட்டும் வகையிலான ஒரு இசை ஒலிக்கும். ஒருவகையில் பின்னணி இசை தன்னளவில் ஒரு கதாபாத்திரம் போன்ற உண்ர்வை ஏற்படுத்தும். 

நிச்சயமாக கே.வி.ஆனந்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது அயன்தான்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
மறைந்த ஓளிப்பதிவாளர் செழியனின் ‘காகித மலர்’.. டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! 
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Embed widget