Amir Khan | தள்ளிப்போன அமீர்கான் படம்.. அப்செட்டான ரசிகர்கள்.. இந்த விஷயம் தெரியும்ல!
லால் சிங் சத்தா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சிங் சத்தா. அத்வைத் சந்தன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) என்ற படத்தின் ரீ-மேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. உலகவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை இந்த படம் பெற்றது. ஆறு தேசிய விருதுகளை இந்த படம் பெற்று இருந்தது.
டாம் ஹாங்க்ஸ் ஹீரோவாக இந்த படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஆமிர் கான் உடன் இணைந்து நாக சைதன்யா, கரீனா கபூர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு,பஞ்சாப், கேரளா, மும்பை,கோவா, துருக்கி, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தில் படப்பிடிப்பு பணி நடைபெற்றது. இதனையடுத்து மீண்டும் தொற்று பரவல் குறைந்த நிலையில் மே மாதம் முதல் இறுதி கட்ட படப்பிடிப்பு லடாக் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
View this post on Instagram
கார்கில் போர் விமானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படத்திற்காக படக்குழுவினர் 45 நாள்கள் லடாக்கில் படமாக்கினர். Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில் லால் சிங் சத்தா வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிய விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் 2022 அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் அமீர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று குறைந்த நிலையில், அக்டோபர் 22 தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த நிர்வாகத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
தொற்று நோய் பரவல் காரணமாக படப்பிடிப்பு நடத்த தாமதமாகிவிட்டது. அதனால் நாங்கள், படத்தை வெளியிட முடியவில்லை. லால் சிங் சத்தா, படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடவில்லை. நாங்கள் படத்தை 2022 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல், அமீர்கானின் ரசிகர்கள், படத்தை தான் வெளியிடவில்லை, லால் சிங் சத்தா டிரெய்லரையாவது விரைவில் வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து போஸ்ட் செய்கிறார்கள்.