Watch Video | ''அன்னபூரணிக்கு பின்னால் மாஸ்டர் மைண்ட். அவர் சொல்வதெல்லாம் பொய்” - லட்சுமி ராமகிருஷ்ணன்
Lakshmi Ramakrishnan Exclusive Interview: நான் நடத்திய நிகழ்ச்சியில் எடிட்டிங்கில் சில விஷயங்கள் இருக்கும்
முதலில் பார்க்கும் போது செம காமெடியாக இருந்தது. ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் தவறாக பேசினார்கள். அது தவறாக இருந்தது. ஆனாலும் நான் கடவுள் என்று கையைக்காட்டி அனுக்கிரகம் கொடுத்தது எல்லாம் செம காமெடி தான். இதை நாம் கண்டிப்பாக ஊக்குவிக்கவே கூடாது. எனக்குள் சக்தி இருக்கு. அதை நன் உணர்கிறேன் என்பதில் தவறே இல்லை. ஆனால் நான் சாமி. காலில் பூ போட வேண்டும். எனக்கு சாமி வருகிறது என்பதெல்லாம் ஜோக்கர்தனமாக இருக்கிறது. ஆனால் அன்னப்பூரணிக்கு பின்னால் யாரோ ஒருவர் இருப்பதாகவும், அவருக்கு பின்னால் மாஸ்டர் மைண்ட் இருப்பதாகவும் தோன்றுகிறது. கண்டிப்பாக அந்த மார்க்கெட்டிங்குக்கு பின்னால் ஒரு மாஸ்டர் மைண்ட் கண்டிப்பாக இருக்கும்.
நான் நடத்திய நிகழ்ச்சியில் எடிட்டிங்கில் சில விஷயங்கள் இருக்கும். சிலர் என்னைப்பார்த்து நீங்கள் கடவுள் என்பார்கள். நான் உடனடியாக அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் உங்களுக்கு அறிவுரைதான் கொடுக்க முடியும் என்பேன். ஆனால் எடிட்டிங்கில் நான் சொன்னது இல்லாமல் போகும். இதனால் நான் வெளி உலகுக்கு ஆணவமாக தெரிந்தேன். இதைப்பற்றி ஒரு ஆர்டிக்கிள் எழுதிய எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கடவுள் என்று சொல்லும் போது நான் ஆணவமாக அமர்ந்திருப்பதாக எழுதி இருந்தார். நான் அந்த ஆர்டிக்கிளை நிகழ்ச்சி இயக்குநரிடம் காண்பித்து என்னை நீங்கள் எப்படி உருவகப்படுத்தினீர்கள் எனக் கேட்டேன். ஆனால் அப்படி நீங்கள் கெத்தாக இருக்க வேண்டும், மக்களுக்கு தெரிய வேண்டும் என இயக்குநர் தெரிவித்தார்.
உண்மையாகவே ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மாஸ்டர் மைண்டுக்கு பின்னால் செல்ல மாட்டார்கள். என்றார். அன்னப்பூரணிக்கு சில வார்த்தைகள் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், '' எவ்வளவு கஷ்டத்தில் நீ இருந்தாய் என தெரியும். எப்படியோ மேலே ஏறி வந்துவிட்டார். உண்மையில் அந்த விஷயத்துக்காக பாராட்டுகிறேன். ஆனால் மக்களை ஏமாற்ற வேண்டாம். அது மிகவும் தவறு. ஆன்மீகத்தில் ஈடுபட உங்களுக்கு பவர் இருப்பதாக நீங்க நினைத்தால் அதை நான் நம்புகிறேன். ஆனால் அதனை உங்கள் வீட்டுக்குள் வைக்க வேண்டும். வெளியில் வந்து மக்களை காலில் விழ வைக்கிறது. பிரச்னையை சரிசெய்வது என சாமி ஆடுவது எல்லாம் செம காமெடியாக இருக்கிறது.
அதை தயவு செய்து செய்ய வேண்டாம். அதைப்போல அவரை விமர்சிப்பவர்களுக்கு சில விஷயங்களை சொல்லிக்கொள்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அவர்கள் திருந்தி வாழ்வது நடக்கக்கூடிய ஒன்று. அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைவைத்து யார் குறித்தும் முடிவு செய்ய வேண்டாம். ஆனால் அவர் இப்போது செய்யும் விஷயத்தை ட்ரோல் செய்யுங்கள். கிண்டல் செய்யுங்கள். யார் சாமி என்று சொல்லி வந்தாலும் அவர்களை விமர்சனம் செய்யுங்கள் என்றார்.