தெரு நாயால் 6 வயது குழந்தையை இழந்த தந்தை...பரபரப்பை ஏற்படுத்திய இந்த வார நீயா நானா
தெரு நாய்களை அகற்ற சொன்ன உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு சரியா தவறா என்பதை விவாதிக்கும் இந்த வார நீயா நானா ப்ரோமோ ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது

தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இந்த தீர்ப்பை ஆதரித்தனர். மறுபக்கம் விலங்கு ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கின. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தியபின் பிடித்த இடத்திலேயே விட்டுவிடவும் மூர்க்கமான நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்கவும் தீர்ப்பு மாற்றப்பட்டது. இந்த பிரச்சனையையே இந்த வார நீயா நானா விவாதிக்க உள்ளது.
இந்த வார நீயா நானா ப்ரோமோ
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானாவில் தெரு நாய்களை அகற்றுவது சரியானதா தவறானதா என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இதில் ஒருபக்கம் நாய்களை தங்கள் குழந்தைகளாக கருதும் தரப்பினர். இன்னொரு பக்கம் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அவரவர் தரப்பு நியாயங்களை முன்வைக்கிறார்கள். இரு தரப்பினர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெறும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் தெரு நாயால் தனது 6 வயது குழந்தையை இழந்த தந்தை பேசியிருப்பது பலரை கலங்கடித்துள்ளது
இந்த மாதிரி புள்ளைய பறிகொடுத்து தவிக்கும் அப்பாக்களை, அம்மாக்களை ஏளனம் செய்யும்போல்,"தெரு நாயிகள் பாவம்; வாயில்லா ஜீவன்; அது சும்மா கடிக்காது"னு முட்டு குடுக்குறவங்கள பாத்தா🤬.இந்த அப்பாவின் நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது 🙏
— Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬 (@thil_sek) August 27, 2025
CC: @mkstalin @Udhaystalinpic.twitter.com/irOa9XnM6J
நகரங்களி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெலிவரி வேலை செய்பவர்கள் , இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்புவர்கள் தெரு நாய்களால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சின்ன குழந்தைகளை கூட்டமாக நாய்கள் தாக்கும் வீடியோக்களை நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். இப்படியான நிலையில் நாய்களின் இனபெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாக ஆகிறது. இந்த நாய்களுக்கு உணவளித்து பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள் பெரும்பாலும் உயர்தட்டு மக்களே. ஆதரவற்ற விலங்குகளை பராமரிப்பதை தங்களது பொழுதுபோக்காக செய்து வருபவர்கள். நகரங்களில் உள்ள நாய்கள் பெரும்பாலும் குப்பைத் தொட்டிகளையே உணவுக்காக சார்ந்திருப்பது உண்மை என்றாலும் அவற்றை பராமரிப்பது என்பது பொதுமக்களைக் காட்டிலும் அரசின் கடமையே. நாய்களை காப்பகத்தில் அடைப்பது உத்தரவு வரவேற்கத் தக்கது என்றாலும் இந்த காப்பகங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவது அவசியமானது.





















