மேலும் அறிய

‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!

திருமணத்திற்கு பின் ரீ-எண்ட்ரி கொடுத்த கோலிவுட் நடிகைகளின் பட்டியல்

பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு நடிகைகள் திரையுலகத்திற்கு டாட்டா பாய் பாய் சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என பிசியாகி விடுவர். சில பேர் ரீ எண்ட்ரி கொடுத்தாலும் அக்கா, அண்ணி , அம்மா என குணசித்திர கதாப்பாத்திரங்களில் மட்டும் நடிப்பர். அதிலும் சிலர், வண்டியை எடுத்துக்கொண்டு நேராக சின்னத்திரை பக்கம் கிளம்பிவிடுவர். இப்படியான சூழ்நிலை முன்னதாக இருந்தது, ஆனால் இந்த காலத்து நடிகைகள், அந்த கருத்தை உடைக்க சினிமாவில் சூப்பர் கம்-பேக் கொடுத்து  வருகின்றனர்.அப்படியாக, மாமியார் வீட்டில் வலது கால் எடுத்து வைத்த பின்னர், சினிமா உலகிற்கு இடது கால் வைத்த நடிகைகளை பற்றி பார்ப்போம்.

நடிகை ஜோதிகா :

காக்க காக்க படம் வெளிவந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்தார் ஜோதிகா. பின்னர் 2006 ஆம் ஆண்டு சூர்யாவை மணந்தார். அதையடுத்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமா உலகிற்கு ஹாய் சொல்லியிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Suriya Sivakumar (@actorsuriya)

2015-ல் வெளிவந்த 36 வயதினிலே படத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அந்த நாள் முதல், பெண்களை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களிலே நடித்து வருகின்றார். சமீபத்தில் சூர்யாவும் இவரும் தேசிய விருது பெற்றனர். அது தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. 

நடிகை காஜல் அகர்வால் :

‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!

தெலுங்கு,தமிழ் என கொடி கட்டி பறந்த நாயகி காஜல், திரையுலகில் உள்ள அஜித், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். பின் பல நடிகைகள் மார்கெட்டில் வர, அவரின் மவுசு சற்று கீழே இறங்கியது.2020-ல் தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை மணந்தார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் சூட்டினார். தற்போது, கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரேயா சரண் :

‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!

என்றும் இளமை குறையாத ஸ்ரேயா பெயரை கேட்டாலே, மியாவ் மியாவ் பூனா, வாஜி வாஜி, என சூப்பர் பாடல்கள்நியாபகம் வரும்.  வெளிநாட்டுகாரர் ஒருவரை மணந்து இவருக்கு ராதா எனும் பெண் குழந்தை உள்ளது. தற்போது, த்ரிஷ்யம் 2வில் ( ஹிந்தி) நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிவுள்ளது 

நடிகை லைலா : 

‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!

2000’களில் களைக்கட்டி வந்த நடிகை லைலா. நந்தா, பிதாமகன், தீனா, தில் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டின் க்யூட்டியாக வளம் வந்தார். மெளனம் பேசியதே படத்தில் கடைசி 5 நிமிடங்களில் வந்தாலும் “ உன் கண்ணு ரொம்ப அழகு இருக்கு கெளதம்” என டைலாக் பேசி அனைவரையும் கவர்ந்தார். திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்கு பிறகு, சர்தார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார். இப்படம் 21 ஆம் தேதி அக்டோபர் வெளியாகவுள்ளது.

சிம்ரன் : 

‛எங்களுக்கு எண்டே கிடையாது...’ காஜல் முதல் லைலா வரை சூப்பர் கம்-பேக் நாயகிகள்!

90களில் தொடங்கி 2K வரை இளைஞர்களை கட்டிப் போட்டவர். யூத் படத்தில் விஜயுடன் நடனம் ஆடி, இடை அசைவின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார் சிம்ரன். 2003 -ல் தீபக் என்பவரை மணந்தார். பின், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் மாளினியாக அசத்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சீமராஜாவில் சமந்தாவின் சின்னம்மாவாக நடித்து வில்லி கெட்-அப்பில் மிரட்டினார். சமீபத்தில், ஆர்யாவின் கேப்டன் படத்தில் நடித்தார்,

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final LIVE Score: முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final LIVE Score: முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
முடிந்த 8 ஓவர்கள்.. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள்..!
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Embed widget