Dhanush 43 Update | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் - வெளியான தனுஷ் 43 அப்டேட்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'டி 43' படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோயுடன் இணைந்து Netflix வழங்கும் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நடித்து வருகிறார். இதனால் நரேன் இயக்கத்தில் உருவாகும் டி 43 படப்பிடிப்பு தாமதமாவதாக கூறப்பட்டது. ஹாலிவுட் படப்பிடிப்பு முடிந்ததும் 'டி 43' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தள்ளிப்போனது.
The Final schedule of @dhanushkraja's #D43 shoot resumes from July, 2021 💥@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek @thondankani @smruthi_venkat @KK_actoroffl @Actor_Mahendran @DoneChannel1 pic.twitter.com/3fFXkxKqua
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) June 25, 2021
தனுஷ் 43 என்ற இந்த படத்தில் கதையின் நாயகியாக மாளவிகா மோகன் நடித்து வருகின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையுடன் இந்த படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என்று இயக்குநர் நரேன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். கார்த்திக் நரேன் மலையாள திரைக்கதை இரட்டையர்களான ஷார்பு மற்றும் சுஹாஸ் ஆகியோரை படத்தின் எழுத்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் பிரசன்னா இணைந்துள்ளார் என்ற ஒரு தகவலும் வலம்வருகிறது. நரேனின் மாபியா படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது.
கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, கலவையான விமர்சனங்களுடன் அண்மையில் வெளியானது தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம். இந்நிலையில் தனுஷ் 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. தனுஷ் 43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் மீண்டும் பல படங்களில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சமுத்திரக்கனி, மாளவிகா மோஹனன், மாஸ்டர் மஹேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் 'தி கிரே மேன்', தமிழில் தனுஷ் 43 மற்றும் பாலிவுட்டில் Atrangi Re ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகின்றார். Atrangi Re தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் மூன்றாவது பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் எல் ராய் என்பவற்றின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுடன் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைந்துள்ளார். சாரா அலி கான் கதையின் நாயகியாக களமிறங்க இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.