மேலும் அறிய

Krishnakumar Kunnath : ”ஹோட்டல் பணியாளர் முதல் பாடகர் வரை.." : கிருஷ்ணகுமார் குன்னத் பற்றி இதெல்லாம் தெரியுமா?

"அதற்கு முன்னதாக ஹோட்டல் துறையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் கனவுகள் மெய்ப்பட  துணையாக இருந்தவர் என் மனைவி"

இந்திய சினிமாவில் பலராலும் கொண்டாடப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். சுருக்கமாக KK என அழைப்பது வழக்கம். இவர் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) கொல்கத்தாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடியக்கொண்டிருந்த சமயத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 53. இவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இவர்  “Pal” என்னும் ஆல்பம் பாடல்கள் மூலம் இசை உலகிற்கு அறிமுகமானார். தடக் தடக் என்னும் பாடல் இவருக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கேகே பற்றி பலரும் அறியாத  சுவாரஸ்ய உண்மைகள் இருக்கின்றான.

Krishnakumar Kunnath : ”ஹோட்டல் பணியாளர் முதல் பாடகர் வரை..
ஹோட்டல் துறையில் வேலை செய்தவர் :

சோனி மியூசிக்கின் நேர்காணல் ஒன்றில் கேகே தனது கடந்த காலம் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.அப்போது தான் 1994 ஆண்டுதான் முதன் முறையாக இசை பயணத்தை தொடர மும்பை வந்தேன். அதற்கு முன்னதாக ஹோட்டல் துறையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் கனவுகள் மெய்ப்பட  துணையாக இருந்தவர் என் மனைவி ஜோதிதான் என்றார்.

ஹரிஹரன்தான் காரணம் !

ஹங்கமா உடனான நேர்காணல் ஒன்றில் பேசிய கேகே, தான் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் ஹரிஹரனுடன் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்தான் என்னை மும்பை சென்று பாடகராக முயற்சியுங்கள் என ஊக்கப்படுத்தினார். 

ஆல்பம் பாடகர் :

கேகேவிற்கு ஒரு பாடகராக இருந்த டிமாண்டுகளை நான் சொல்லி தெரிய தேவையில்லை. ஆனாலும் அவர் அந்த பிஸியான சமயத்திலும் தான் உலகறிய காரணமாக இருந்த , ஆல்பம் பாடல்களை உருவாக்க தவறியத்திலை. அதில் அத்தனை ஆர்வமாக இருந்திருக்கிறார். இதுவரையில் 3500 ஆல்பம் பாடல்களை பாடியிருக்கிறார்.

Krishnakumar Kunnath : ”ஹோட்டல் பணியாளர் முதல் பாடகர் வரை..
பயிற்சிப்பெற்ற இசைக்கலைஞர் அல்ல :

KK  ஒரு பயிற்சி பெற்ற கிளாசிக்கல் பாடகர் அல்ல. சிறிது காலம் மட்டுமே இசை பள்ளிக்கு சென்ற அவரை , அவரது தந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனாலும் தனக்கு தொடக்கத்தில் இருந்தே கேள்வி ஞானம் அதிகமாக இருந்ததாக கூறுகிறார் கேகே. ஒரு பாடலை கேட்டால் போதுமாம் அப்படியே பாடிவிடுவாராம்.  இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

குருவே சரணம்! 

1960 ஆம் காலக்கட்டத்தில் பாலிவுட்டில்  பிரபலமான பாடகர் கிஷோர் குமார். அவர்தான் கேகே-விற்கு இன்ஸ்பிரேஷன் என பல இடங்களில் குறிப்பிட்டுருக்கிறார். கிஷோர் குமாரும் கேகேவை போல முறையாக இசை பயின்றவர் இல்லை.”கிஷோர்தா என் வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தியவர் “ என நேர்காணலில் குறிப்பிட்டிருகிறார்.

பன்மொழி வித்தைக்காரர் !

கேகே இந்தி மொழிகளில் மட்டுமல்லாது தமிழ் மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார், ஸ்டாபெர்ரி பெண்ணே, காதல் வளர்த்தேன், காதலிக்கும் ஆசையில்லை அப்படிப்போடு,, உயிரே.. உயிரே என இவரின் வசீகரிக்கும் குரலில் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளன. இது தவிர தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம், குஜராத்தி மற்றும் அசாமிய மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget