Kamal Haasan KH233: “துப்பாக்கி மற்றும் தோட்டவைத்தான் காதலித்தான்”.. எச்.வினோத் படத்திற்கான பயிற்சியைத் தொடங்கிய கமல்..!
KH 233 படத்திற்காக கமல்ஹாசன் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து எச்.வினோத் இயக்கும் KH 233 படத்திற்கான பயிற்சியிகளை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். இதற்கான் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்.
கமல் - ஹெச்.வினோத் காம்போ
RISE TO RULE#Ulaganayagan #KamalHaasan #KH233 #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/RAxAFXliz1
— Turmeric Media (@turmericmediaTM) July 4, 2023
சதுரங்க வேட்டை, தீரன் , வலிமை துணிவு உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து எச். வினோத் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிற்கான வேலைகளுக்கான தொடக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக படத்தின் அறிவிப்பு குறித்தான வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52ஆவது படமாக இப்படம் உருவாகிறது கமல்ஹாசனின் 233ஆவது படம்.
தன் முதல் படமான சதுரங்க வேட்டை தொடங்கி எச்.வினோத் தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு கொண்ட கதைகளை இயக்கி வரும் நிலையில், இந்தப் படமும் அவ்வாறே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் முன்னதாக நெல் ஜெயராமன் மற்றும், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் கமல் - ஹெச்.வினோத் இருவரும் கலந்துரையாடிய நிலையில், அவரைப் பற்றிய கதையாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
கன்ஸ் & கட்ஸ்
Guts & Guns 🔥
— Raaj Kamal Films International (@RKFI) September 7, 2023
Training Begins #FuriousAction in #KH233#Ulaganayagan #KamalHaasan #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #Mahendran #HVinoth@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/Mec86yIhlh
தற்போது இந்தப் படத்திற்கான பயிற்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளதை தெரிவிக்கும் விதமான ராஜ்கமல் நிறுவனம் கன்ஸ் & கட்ஸ் என்கிற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பல ரகமான துப்பாக்கிகளை பயன்படுத்தி கமல்ஹாசன் பயிற்சி எடுத்து வருகிறார். விக்ரம் படத்தை போல் இந்தப் படமும் துப்பாக்கி தோட்டா என மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்று தெரியவருகிறது. கமலின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டக்கூடிய ஒரு தகவலாக அமைந்திருக்கிறது.
இந்தியன் 2
இதனிடையே ஷங்கர் இயக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது கமல்ஹாசன் ரகூல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மேலும் இந்த படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள் நடிக்கிறார்கள். அவர்கள் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோர் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!