Kamal Haasan 233 Movie : உலகநாயகனை இயக்க போகும் துணிவு இயக்குனர்... மீண்டும் திரையை பகிரும் விஜய்சேதுபதி... வெளியானது அதிரடி அப்டேட்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனோடு கூட்டணி சேர உள்ளார் ஹெச். வினோத். விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த மூவரின் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படம் பொங்கல் ரிலீஸாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைய தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதால் திரை ரசிகர்கள் மிகுந்த பரபரப்பில் உள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணையும் அஜித் :
இயக்குனர் ஹெச். வினோத் ஒரு சில தமிழ் திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் தனது தனித்துவமான திரைக்கதையால் ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசான பிறகு லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது.
After #Thunivu, Dir #HVinoth will be directing #Ulaganayagan @ikamalhaasan next..#MakkalSelvan @VijaySethuOffl will also be part of the cast..
— Ramesh Bala (@rameshlaus) November 16, 2022
ஹெச் வினோத் இயக்கத்தில் அடுத்த ஹீரோ யார் ?
அந்த வகையில் இயக்குனர் ஹெச். வினோத் அடுத்ததாக கூட்டணி சேர போவது உலகநாயகன் கமல்ஹாசனுடன். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற 'விக்ரம்' திரைப்படத்தை தொடர்ந்து ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் எனும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஒரு ரோலில் நடிக்க உள்ளார் என்பது அடிஷனல் சர்ப்ரைஸ். ஏற்கனவே கமல்ஹாசன் - விஜய் சேதுபதி கூட்டணி 'விக்ரம்' திரைப்படத்தில் திரையில் தெறிக்கவிடும் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தனர். அதை தொடர்ந்து மீண்டும் இந்த காம்போ ஒன்றாக திரையில் சேரவுள்ளது என்பது சரவெடி சந்தோஷமாக உள்ளது. இது கமல்ஹாசன் நடிக்கும் 233வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#KH233 will be directed by #HVinoth 🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 16, 2022
- Official from Udhay in recent interview #KamalHaasan pic.twitter.com/rlcDMm7BhP
ஹெச். வினோத் - கமல்ஹாசன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.