Watch Video: புது சொகுசு கார் வாங்கியுள்ள ’ராக்கி பாய்’... விலை இத்தனை கோடிகளா.. வைரலாகும் வீடியோ!
நடிகர் யஷ் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யுவி கார் ஒன்றைப் புதிதாக வாங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கன்னட நடிகர் யஷ் புதிதாக தான் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் எஸ்யுவி காரை மாஸாக ஓட்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
கே.ஜி.எப் திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் கலக்கி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் யஷ். இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப்படமாக அமைந்ததுடன், சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட்டாக இருந்தது.
இதனையடுத்து, பிரசாந்த் நீலின் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரின் நடிப்பில் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியானது. ராக்கி பாயாக கோபம், தாய்ப்பாசம், ஆக்ஷன் எனக் கலந்துகட்டி நடித்திருக்கும் நடிகர் யஷ்ஷூக்கு இந்தத் திரைப்படம் இந்திய அளவில் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதுடன், கே.ஜி.எஃப் படத்தின் 3ஆம் பாகத்துக்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதே உத்வேகத்துடன் 3ஆம் பாகம் எடுப்பதற்கான பணிகளையும் படக்குழு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் யஷ் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யுவி கார் ஒன்றைப் புதிதாக வாங்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கெனவே யஷ் விலை உயர்ந்த ஆடம்பரமான கார்களை வைத்துள்ள நிலையில் தற்போது இந்தப் புதிய காரை வாங்கி உள்ளார்.
இந்தக் காரின் மதிப்பு 4 கோடி ரூபாய் ஆகும். யஷ், அவரின் மனைவி ராதிகா பண்டிட் மற்றும் அவரது குழந்தைகளான அய்ரா மற்றும் யாதர்வ் ஆகியோரும் இந்தக் காருடன் போஸ் கொடுத்துள்ளனர். யஷ் தனது புதிய ரேஞ்ச் ரோவரை ஓட்டிப் பார்த்தது தொடர்பான வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Boss New Car 🔥#YashBOSS #Yash19 @TheNameIsYash pic.twitter.com/w4mdso38UM
— Only Yash™ (@TeamOnlyYash) June 15, 2023
மேலும் படிக்க
Senthil Balaji: ஐ.சி.யு.வில் செந்தில்பாலாஜி.. விரைவில் அறுவை சிகிச்சை -மருத்துவமனை அறிவிப்பு