மேலும் அறிய

Senthil Balaji: ஐ.சி.யு.வில் செந்தில்பாலாஜி.. விரைவில் அறுவை சிகிச்சை -மருத்துவமனை அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை - பாஸ்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மருத்துவமனை அறிவித்துள்ளது.  

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை - பாஸ்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மருத்துவமனை அறிவித்துள்ளது.  இது குறித்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் எனவும், அதற்கு அவரது உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் அந்த அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அதாவது ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது இதய செயல்பாடுகள் மருத்துவக்குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரகுராம் தலைமையில் நடைபெற்ற பரிசோதனைக்குப் பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். மேலும், அவரது உடலில் மயக்கமருந்து சோதனை நடத்தி அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்குமா எனவும் பரிசோதனை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

ஏற்கனவே இன்று காலை அதாவது ஜூன் 16ஆம் தேதி காலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓரிரு தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றும், அவரது மனைவி கோரிக்கை வைத்ததால் தான், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறினார். 


Senthil Balaji: ஐ.சி.யு.வில் செந்தில்பாலாஜி.. விரைவில் அறுவை சிகிச்சை -மருத்துவமனை அறிவிப்பு

பின்னணி 

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியது. இதையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று இரவு தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இந்த உத்தரவை பிறப்பித்தனர். செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் உரிய அனுமதியின்றி சந்திக்கக் கூடாது.  அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே உரிய அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை குழுவும் ஆராயலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். தலைமைச்செயலகத்தில் உள்ள அவரின் அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.  அப்போது அவர் நெஞ்சு வலி என அழுத நிலையில், அவரை உடனே ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget