மேலும் அறிய

Kasturi Raja About Dhanush : தனுஷும், ஐஷ்வர்யாவும் மறுபடியும் சேரப்போறாங்களா? : கஸ்தூரி ராஜா சொன்ன பதில்..

Kasthuri Raja latest : தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளார்கள் என பல தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு இயக்குநர் கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளார்கள் என பல தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு தனுஷின் தந்தையும், இயக்குநமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் விவாகரத்து செய்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக பேசப்படுகிறது. இதைப்பற்றி பல தகவல்களும் வெளியாகிவருகிறது. தற்போது, இதுகுறித்த தகவலை பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கிறார்.

கும்மி பாட்டு, வீர தாலாட்டி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பிரபலமான படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. தனுஷின் முதல் படமான துள்ளவதோ இளமை படத்தையும் இவரே இயக்கியிருந்தார். தற்போது, பிரபல நிறுவனத்தின் யூடியூப் சேனலின் நேர்காணலில் பங்குபெற்ற கஸ்தூரி ராஜாவிடம் தனுஷ் - ஐஸ்வர்யா சம்மந்தப்பட்ட தகவல்கள் குறித்து கேட்கப்பட்டது.

தொலைக்காட்சியில் இருவரும் இணைந்து விட்டனர் என்று செய்திகள் வருகிறது, அதைப்பற்றி சொல்லுங்க சார் என நெறியாளர் கேட்க, “நான் இங்கே இருக்கேன். தொலைக்காட்சி எங்கேயோ இருக்கிறது. அல்லாஹ் போதுமானவன். எங்களுக்கு பிள்ளைகளின் சம்பாத்தியம் இல்லையென்றால் கூட எங்களால் வாழ்ந்து காட்ட முடியும். என் மனைவியை என்னால் காப்பாத்த முடியும். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும், அதை தவிர்த்து எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கு எது இடையூறாக இருந்தாலும், அது நமக்கும் இடையூறுதான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சிதான். இதை பற்றி கேள்வி கேட்பவர்களிடம், இதே பதிலைதான் கொடுத்து வருகிறேன். எது வேண்டுமானலும் நடக்கலாம், நமக்கு என்ன தெரியும்?. ஐந்து வருடம் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு, அறிவுரை சொல்ல நமக்கு தகுதியில்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. நம்மை விட பத்து வருஷம் சின்னவர்கள், இவர் யார் இவ்வளவு வயதாகி இவருக்கு என்ன வேலை? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் எங்கு இருக்கிறாய். ஷூட்டிங் முடிந்ததா என்று நாம் கேள்வி எழுப்ப முடியாது. என் வயதில் நான் யார் பேச்சையும் கேட்டது கிடையாது. இதுவரை நான் யாருக்கும் கெடுதல் நினைத்தில்லை. இறைவனின் அருளால் என் நான்கு குழந்தைகளும் என்னை போல் இருக்கின்றனர். என் குழந்தைகளின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் குழந்தைகள் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது” என்று பதிலளித்தார்.

View this post on Instagram
 
A post shared by Grande Muthuram Cinemas (@grandemuthuramcinemas)

இதற்கு முன்பாக, நானே வருவேன் படம் வெளியான சமயத்தில், படம் குறித்த கேள்விகள் கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டன. அப்போது, ஒருவர் “தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து” குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “இது நமக்கு சம்மந்தமில்லாத கேள்வி நீங்க கேட்கக்கூடாது” என டென்ஷனாக பதிலளித்தார். மேலும், “இதனாலதான் மீடியாவ மீட் பன்றதில்ல..” எனவும் கேள்வி கேட்டவரை கடிந்து கொண்டார். 

தனுஷ்-ஐஷ்வர்யா விவாகரத்து:

View this post on Instagram
 
A post shared by Dhanush (@dhanushkraja)

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு கரம் பிடித்தார் நடிகர் தனுஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனுஷும்-ஐஸ்வர்யாவும் பிரிந்திருக்க போவதாக அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இந்த விஷயம் கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இவர்களுக்கு யாத்ரா- லிங்கா என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget