மேலும் அறிய

Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் vs தார் ராக்ஸ்: முழு ஒப்பீடு- பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் இவற்றின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

சமீபத்தில் சந்தையில் அறிமுகமாகியுள்ள புதிய மற்றும் வலிமையான எஸ்யூவி கார் ஒன்றை வாங்க நினைக்கிறீர்களா?

உங்களுக்கு, மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ என் மற்றும் தார் ராக்ஸ் ஆகிய இரு மாடல்களுக்கு இடையே எந்த காரை வாங்குவது என்ற பெரிய குழப்பம் ஏற்படலாம். இவை இரண்டும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகள். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் இவற்றின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

விலை நிலவரம்

ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை ரூ.13.20 லட்சம்; டாப் வேரியண்ட் விலை ரூ.24.17 லட்சம் ஆகும். மறுபுறம், தார் ராக்ஸ் ஆரம்ப விலை ரூ.12.25 லட்சம்; டாப் வேரியண்ட் ரூ.22.06 லட்சம். பட்ஜெட்டில் மஹிந்திரா எஸ்யூவி வாங்க நினைப்போருக்கு தார் ராக்ஸ் சிறந்த தேர்வாகும்.

மைலேஜ்

நெடுஞ்சாலைகளில் ஸ்கார்பியோ என் 15.4 கி.மீ மைலேஜ் தருகிறது. தார் ராக்ஸ் 15.2 கி.மீ வழங்குகிறது. மைலேஜில் இரண்டும் கிட்டத்தட்ட சமம் என்றாலும், ஸ்கார்பியோ என் சற்று முன்னிலையில் உள்ளது. பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்டில், ஸ்கார்பியோ என் சுமார் 19 கி.மீ, தார் ராக்ஸ் 12.4 கி.மீ மைலேஜ் தருகின்றன.

இன்ஜின் மற்றும் பவர்

ஸ்கார்பியோ என் 2198cc இன்ஜின் மூலம் 172bhp பவர், 400Nm டார்க் திறனை வெளிப்படுத்தும். தார் ராக்ஸ் 2184cc இன்ஜின் மூலம் 172bhp பவர், 370Nm டார்க் திறனை உருவாக்கும். பவர் சமம் என்றாலும், டார்க் திறனில் ஸ்கார்பியோ என் முந்துகிறது. இரண்டுமே 4WD மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் வருவதால், ஆஃப்-ரோடு மற்றும் கரடுமுரடான பயணங்களுக்கு இவை இரண்டுமே மிகவும் ஏற்றவை.

வடிவமைப்பு மற்றும் இருக்கைகள்

இவற்றுக்கு இடையிலான மிகப்பெரிய வித்தியாசமே அளவுதான். வடிவமைப்பு அடிப்படையில் ஸ்கார்பியோ என் 460 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட 7 சீட்டர் காராகும். பெரிய குடும்பத்துடன் ஒன்றாகப் பயணிக்க இதுவே மிகவும் சிறந்த தேர்வு. தார் ராக்ஸ் 5 சீட்டர் மாடல் என்றாலும், பயணிகளுக்கு அதிக லெக்ரூம், சிறந்த உட்புற இடவசதியை கொண்டுள்ளது. ஸ்டைலான தோற்றம் கொண்ட சிறிய அளவிலான பவர்ஃபுல் வாகனத்தை ஓட்ட விரும்புபவர்களுக்கு தார் ராக்ஸ் சரியான சாய்ஸ்.

பாதுகாப்பில் எப்படி?

பாதுகாப்பில் இரு கார்களுமே இணையானவை. தார் ராக்ஸ் குளோபல் என்சிஏபி சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இதில் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் வார்னிங், சைல்டு லாக் மற்றும் ஓவர்ஸ்பீடு வார்னிங் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக உள்ளன.

ஸ்கார்பியோ என் காரும் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளதுடன் இதே பாதுகாப்பு வசதிகளை அப்படியே வழங்குகிறது. எனவே, நீங்கள் பாதுகாப்பு ரீதியாக இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் உங்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பிரச்சினையும் பயமும் கட்டாயம் இருக்காது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
90’ஸ்’ கிட்ஸின் நாயகன்.. அட்டகாசமாய் இருக்கும் நியூ லுக் - இந்த பைக் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget