மேலும் அறிய

தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

தனுஷ் தொடர்பான பழைய தயாரிப்பாளர் பிரச்சினை மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கம் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் தனுஷைச் சுற்றிய பழைய தயாரிப்பாளர் பிரச்சினை மீண்டும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்களிடம் பெற்ற முன்பணம் தொடர்பான விவகாரத்தில் தனுஷ் அளித்திருந்த உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தனுஷ் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோருடன் தனுஷுக்கு ஏற்பட்டிருந்த நிதி மற்றும் கால்ஷீட் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு தயாரிப்பாளர்களிடமும் தனுஷ் முன்பணம் பெற்றிருந்ததாகவும், அதற்குப் பதிலாக ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க கால்ஷீட் வழங்கப்படவில்லை என்றும் ஏற்கனவே புகார்கள் எழுந்திருந்தன.

இந்த விவகாரம் கடந்த 2024ஆம் ஆண்டு தீவிரமடைந்த நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷின் புதிய படங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பு சங்கத்தை அணுக வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் தனுஷின் படப்பிடிப்பு நடவடிக்கைகள் குறித்தும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் FEFSI உள்ளிட்ட அமைப்புகளின் தலையீட்டில் தனுஷ் தரப்புக்கும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரம் அதன்பிறகும் முழுமையாக முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 2025ஆம் ஆண்டு மீண்டும் தனுஷின் கால்ஷீட் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால் ஏற்கனவே தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் திருப்பி தருவதாக உறுதியளித்த தொகையை அவர் இதுவரை திருப்பி தராததால் தனுஷின் அடுத்த படப்பிடிப்பை தயாரிப்பாளர் சங்கம் தடுத்து நிறுத்துமா அல்லது இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார்களா என்பது தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓம் 

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருக் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget