நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
TN 10th Original Marksheet 2026:

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆக.12) முதல் பெறப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
நாளை காலை 10 மணி முதல்
மார்ச்/ ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவு உட்பட) மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை 12.08.2026 (புதன் கிழமை) அன்று காலை 10 மணி முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தனித் தேர்வர்களுக்கு எப்படி?
நேரடி தனித் தேர்வர்கள் (Direct-Private Candidates) தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த அசல் மாற்றுச் சான்றிதழ்களை அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து, மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கி நடந்து வரும் நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மருத்துவக் கலந்தாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















