என்ன திட்டாதீங்க எப்போவ் - கர்ணன் பட நடிகர் ட்விட்டர் பதிவு
கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா
மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் தனுஷ், லால், நடராஜன் சுப்பிரமணியம், யோகி பாபு உள்ளிட்ட முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9 தேதி திரைக்கு வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் கண்ணபிரான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடராஜன் தனது ட்விட்டரில், "என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி.. " என்று பதிவிட்டார்.
கர்ணன் திரைப்படத்தில் நடராஜன் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vera level acting sir @natty_nataraj ...... But andha character ah paatha semma kovam dhan sir varudhu ..... Apdi oru acting sir ..... 👏
— Nisanthan B (@BNisanthan) April 11, 2021
Vera level acting Anna.. unga attitude and body language la verithanam 🔥 pic.twitter.com/raNwFLll8P
— vivekkumar. V (@vivek51587571) April 11, 2021
நடராஜன் சுப்பிரமணியம், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தவர். மேலும் இவர் பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி, ஆகிய இந்தி திரைப்படத்திலும், தமிழில் வெளிவந்த யூத் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
சக்கரவியூகம், மிளகா, மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.