Kannada Actor Arrest: இந்துத்துவா குறித்து ட்வீட் செய்த நடிகர் கைது; அப்படி என்ன நடந்தது?
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் வரும் மே மாதத்தில் இங்கு சட்ட மன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றவுள்ளது. இந்நிலையில், இங்கு உள்ள சேத்தன் குமார் அகிம்சா எனும் நடிகர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா என்று அழைக்கப்படும் சேத்தன் குமார் இந்துத்துவா குறித்து அவர் செய்த ட்வீட் வைரலானதை அடுத்து பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான புகாரில், "இந்துத்துவா பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று கூறும் அவரது ட்வீட், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
அவரை பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசார் கைது செய்தனர். தலித் மற்றும் பழங்குடியினர் ஆர்வலரான நடிகர் சேத்தன் குமார், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஒரு மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்த குற்றச்சாட்டு மற்றும் இரு பிரிவினருக்கு இடையே பகைமையை வளர்க்கும் அறிக்கைகளை வெளியிட்டார் எனவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் 20 அன்று ஒரு ட்வீட்டில், சேத்தன் குமார் இந்துத்துவா பொய்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
"சாவர்க்கர்: ராமர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய போது இந்திய 'தேசம்' தொடங்கியது -> ஒரு பொய்
1992: பாபர் மசூதி 'ராமரின் பிறந்த இடம்' -> ஒரு பொய்
2023: உரிகவுடா-நஞ்சேகவுடா திப்புவை 'கொன்றார்கள்'—> ஒரு பொய், "என்று அவர் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த ட்வீட்டில், இந்துத்துவாவை உண்மையால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்றும் அந்த உண்மை சமத்துவம் என நடிகர் சேத்தன் குமார் குறிப்பிட்டுள்ளார்.
Hindutva is built on LIES
— Chetan Kumar Ahimsa / ಚೇತನ್ ಅಹಿಂಸಾ (@ChetanAhimsa) March 20, 2023
Savarkar: Indian ‘nation’ began when Rama defeated Ravana & returned to Ayodhya —> a lie
1992: Babri Masjid is ‘birthplace of Rama’ —> a lie
2023: Urigowda-Nanjegowda are ‘killers’ of Tipu—> a lie
Hindutva can be defeated by TRUTH—> truth is EQUALITY pic.twitter.com/0Yjz4x1aea
அவர் ட்வீட் செய்த சில மணி நேரங்களிலேயே, ஹிந்து ஆதரவு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்து, ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பிப்ரவரி 2022 இல், ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் மீது ஆட்சேபனைக்குரிய ட்வீட்டிற்காக அவர் கைது செய்யப்பட்டார்.