Suriya : 6 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கோம்...அகரம் சேவை இல்லை பொறுப்பு..சூர்யா செம ஸ்பீச்
அகரம் அறக்கட்டளை இதுவரை கிட்டதட்ட 6 ஆயிரம் பட்டதாரி மாணவர்களை உருவாக்கி இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்
சூர்யா
நடிப்பு தவிர்த்து நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு குறித்து சமீபத்தில் அவர் பேசுகையில் இப்படி கூறியுள்ளார்
"என் அப்பா என்ன செய்யவென்று தெரியாமல் ஊரில் இருந்தபோது தான் ஒரு தூரத்து சொந்தக்காரர் அவரை தோளில் தட்டிக்கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவரால் தான் என் அப்பா சென்னைக்கு வந்தார். நடிகரானார். எங்கள் வாழ்க்கை மாறியது. யாரோ ஒருவர் தட்டிக்கொடுத்தது தான் எங்கள் ஒட்டுமொத்த தலைமுறையே மாறியிருக்கிறது.
நான் சமீபத்தில் ஒரு நாளிதழில் பார்த்தேன் 90 சதவீதம் மக்கள் வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கிறது. 90 சதவீதம் மக்கள்தொகை மாதத்திற்கு 25 முதல் 30 ஆயிரம்கூட சம்பளமாக வாங்குவதில்லை. அப்படி இருக்கை நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். அதனால் பணம் எப்போதுமே ஒருவரது எதிர்காலத்திற்கு தடையாக இருக்க கூடாது. அப்படிதான் அகரம் அறக்கட்டளை தொடங்கியது. இதற்குதான் ஜெய்பீன் இயக்குநர் ஞானவேலுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் . அவர் தான் இந்த ஐடியாவை கொடுத்தார். அதாவாது இன்று 2024 ஆம் ஆண்டில் கூட முதல் தலைமுறை பட்டதாரி படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தான் அகரம் உதவிக்கரம் கொடுக்கிறது. அகரம் தொடங்கி 16 ஆண்டுகள் கடந்துள்ளன. இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அகரமில் படித்து பட்டம் பெற்றுள்ளார்கள். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள். இது நன்கொடை கிடையாது இது ஒரு பொறுப்பு. எனக்கு பிறகு இதை என் மகன் மற்றும் மகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் விருப்பம்” என சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Suriya : அம்மா வாங்கிய கடன கொடுக்கதான் நடிக்க வந்தேன்..ஆனால் ரசிகர்கள் கொடுத்த அன்பு..செம ஃபிளாஷ்பேக் சொன்ன சூர்யா