Suriya : நானும் சிவாவும் சின்ன வயசு நண்பர்கள்...சேர்ந்து படம் பண்ணாததற்கு காரணம் இதுதான்..சூர்யா ஓப்பன் டாக்
கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவும் தானும் சின்ன வயது நண்பர்கள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி , பாபி தியோல் , யோகி பாபு , கருணாஸ் , ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார். தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
சூர்யாவும் சிவா கூட்டணி
கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சிவா. அடுத்தபடியாக அவர் சூர்யாவின் படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வருகிறார்கள். இதன்பின் தொடர்ச்சியாக அஜித் நடித்த நான்கு படங்களை இயக்கினார். பின் ரஜினி நடித்த அண்ணாத்தே படத்தை இயக்கினார். சிவாவுடன் இணைந்து பணியாற்ற இவ்வளவு கால தாமதம் ஆனது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
" நானும் சிவாவும் சின்ன வயது நண்பர்கள். நிறைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அடிக்கடி பார்த்துக் கொள்வோம். நான் சிவாவை சார் என்று எல்லாம் கூப்பிட மாட்டேன் ஏனால் அவர் வயதில் எனக்கு இளையவர். நாங்கள் இருவரும் இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள் அதனால் நாங்கள் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வேலை செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிந்தவர் என்பதாலே ஒரு படம் பண்ண வேண்டும் என்று இந்த படத்தை நாங்கள் எடுக்கவில்லை. கங்குவா படத்தின் கதை தான் எங்களை இணைத்தது. சும்மா பெயருக்கு நானும் சிவாவும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஞானவேல் ராஜா இருந்தார் என்பதற்காக மட்டும் இந்த படத்தை நாங்கள் உருவாக்கவில்லை." என சூர்யா தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க : Suriya : 6 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியிருக்கோம்...அகரம் சேவை இல்லை பொறுப்பு..சூர்யா செம ஸ்பீச்