Ajith : சிறுத்தை சிவா பற்றி அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை..பெருமையாக பேசிய சூர்யா
Ajith on Siva : கங்குவா இயக்குநர் சிறுத்தை சிவா பற்றி நடிகர் அஜித் தன்னிடம் சொன்னதை நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்

கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திஷா பதானி, பாபி தியோ , கருணாஸ் , ரெடின் கிங்ஸ்லி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரித்து தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
சிறுத்தை சிவா பற்றி அஜித்
"I met #Ajithkumar sir recently & AK said Ippo theriyatha naa en Siva sir ah vidalanu😁💥"
- #Suriya during #Kanguva Promotions pic.twitter.com/pqFlv8uPh8— AmuthaBharathi (@CinemaWithAB) October 22, 2024
கங்குவா படத்தின் ப்ரோமோஷன்கள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக மும்பை மற்றும் டெல்லியில் நடிகர் சூர்யா ரசிகர்களை சந்தித்து பேசினார். கங்குவா படத்திற்கான சிறப்பு நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித்தை சந்தித்து பேசிய தருணத்தை சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார். " சமீபத்தில் நான் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் 'இப்போ தெரியுதா நான் ஏன் சிவா சார விடலனு என்னிடம் கேட்டார். அஜித் மற்றும் சிவா இணைந்து சூப்பரான படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்." என சூர்யா தெரிவித்தார்.
அஜித் சிறுத்தை சிவா கூட்டணி
வீரம் , வேதாளம் , விவேகம் விஸ்வாசம் என இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் கூட்டணியில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றன. வேதாளம் , விவேகம் ஆகிய இரு படங்கள் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் மற்ற ரசிகர்களுக்கு ட்ரோல் மெட்டிரியலாக மாறின. செண்டிமெண்ட் காரணமா தெரியவில்லை எல்லா படங்களும் 'வி 'யில் தொடங்கி 'ம்' இல் முடியும் படங்கள். இதில் ரசிகர்களின் பொறுமையை அதிகபட்சமாக சோதித்த படம் என்றால் விவேகம் படம். கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஒரே இயக்குநர் நடிகர் கூட்டணியில் தொடர்ச்சியாக படங்கள் வெளியானதால் ரசிகர்களிடையே ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். கொஞ்ச வருடத்திற்கு சிவா மற்றும் அஜித் இணையாமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் தெரிவித்தார்கள். தற்போது ஐந்தாவது முறையாக அஜித் சிவா கூட்டணி இணைய இருப்பதாக இயக்குநர் சமீபத்தில் சிவா தெரிவித்துள்ளார்.

