இனி வேலைக்கு ஆகாது... பிக்பாஸை விட்டு ஒதுங்கும் கமல்?! ஷாக்கில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல்கள் அரசல்புரசலாக அடிபடுகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல்கள் அரசல்புரசலாக அடிபடுகின்றன. விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் பிரபலம். அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் ஸ்டார் ஷோக்களில் ஒன்று. இந்த ஷோ இதுவரை 5 சீசன்களைக் கடந்துவிட்டது. கடைசியாக நடந்த சீசனில் ராஜூ வெற்றியாளராகவும், பிரியங்கா ரன்னர் அப்பாகவும் தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து விஜய்டிவி தற்போது மீண்டும் பிக்பாஸ் ஓடிடி எனும் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த பிக்பாஸ் 4 சீசன்களிலும் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்ததோடு, யாரால் டிஆர்பி எகிறியதோ? அவர்கள் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களில் நம்பர் ஒன் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த வசனங்கள் தூள் பறக்கின்றன என இதை விரட்டி விரட்டிப் பார்ப்பவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தான் இந்த நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. அவர் அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த உள்ளதால் இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இது குறித்து கமல்ஹாசன் தரப்பிலோ இல்லை விஜய் டிவி தரப்பிலோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தரக்கட்டுப்பாட்டை செய்யவில்லை என்றும், வீட்டில் பறக்கும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு ஒருமுறை கூட கட் கூறுவதில்லை என்றும், அதுவும் குறிப்பாக வனிதா விஜயகுமாருக்கு எக்கச்சக்கமாக சலுகை காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடையே தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் நடைபெறுகிறது. இந்தியில் சல்மான் கான், மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் நாகர்ஜுனா, தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக அதன் தொகுப்பாளர் கமல்ஹாசன் 60 கோடி ருபாய் சம்பளமாக பெற்றார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான சம்பளம் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்நிலையில், திடீரென அவர் விலகுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் பிக்பாஸ் சீசன் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கணிசமாக ரசிகர்கள் இருக்கின்றனர்.