Kalidas Jayaram Girlfriend : ஆமாம் நான் டேட்டிங் செய்கிறேன்... உண்மையை உடைத்த காளிதாஸ் ஜெயராம்
நம் அனைவருக்கும் பரிச்சயமான "நட்சத்திரம் நகர்கிறது" காளிதாஸ் ஜெயராம் தற்போது தாரிணி காலிங்கராயர் உடன் தான் டேட்டிங் செய்வதை இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு ஹீரோ காளிதாஸ் ஜெயராம். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஜெயராமின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம். தன்னுடைய தந்தையை போலவே காளிதாஸும் மிமிகிரி செய்வதில் திறமையானவர். குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்து விருதுகளும் பெற்றுள்ளார். 2016 ம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
சில நாட்களாக நெட்டிசன்களுக்கு இருந்த கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம். ஆம் அவர் டேட்டிங் செய்வதை உறுதி செய்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிப்பு :
சமீபத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான திரைப்படம் "நட்சத்திரம் நகர்கிறது". இவரின் சிறப்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப் பெற்றது. மேலும் விக்ரம் திரைப்படத்திலும் ஒரு நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். ஒரு சில சீசன்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் நிறைவான நடிப்பால் ஸ்கோர் செய்தார். இணைய தொடர்களில் மிகவும் பிரபலமாகியது நான்கு தொடர்களாக வெளியான பாவக்கதைகள். அதிலும் "தங்கம்" தொடரில் காளிதாஸின் நடிப்பு அபாரமாக இருந்தது.
If you catch us smiling at our phones, it's because we're looking at these pictures of @kalidas700 as Iniyan💫❤️ pic.twitter.com/8JxnlCnFx5
— Netflix India South (@Netflix_INSouth) October 5, 2022
நெட்டிசன்கள் கேள்வி ?
ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராமில் சமீபத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் ஜெயராம் குடும்பம் தவிர வேறு ஒரு பெண் இருந்தது அந்த அனைவரையும் யூகிக்க செய்தது. அவர் பெயர் தாரிணி காலிங்கராயர், 2019 ல் மிஸ் தமிழ்நாடு டைட்டில் வென்றவர் என்றும் அவர் ஒரு மாடல் என்ற விவரமும் தெரியவந்தது. காளிதாஸ் அவருடன் டேட்டிங் செய்து வருகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
Congratulations @kalidas700 and Tarini Kalingarayar. 🎉🎉🎉 pic.twitter.com/ND1HlhTePO
— Rajasekar (@sekartweets) October 7, 2022
டேட்டிங் உறுதிசெய்த காளிதாஸ்:
காளிதாஸ் ஜெயராம் தற்போது தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். தாரிணி காலிங்கராயர் உடன் தான் டேட்டிங் செய்வதை இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார். இருவரும் ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அனைவரின் யுகங்களும் சரியாக தான் இருந்துள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.