மேலும் அறிய

Kajal Aggarwal: ‛ரொம்ப கஷ்டமா இருக்கு..’ 4 மாதங்களுக்கு பிறகு இந்தியன் 2 ஸ்பாட்டில் காஜல்!

இந்தியன் 2 வில் மீண்டும் இணைந்திருப்பதாக கூறி நடிகை காஜல் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

 ‘இந்தியன் 2 ’ வில் மீண்டும் இணைந்திருப்பதாக கூறி நடிகை காஜல் அகர்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2 ஆம் பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியன்  2 குறித்த அறிவிப்பு வெளியானது. 

Kajal Aggarwal: ‛ரொம்ப கஷ்டமா இருக்கு..’ 4 மாதங்களுக்கு பிறகு இந்தியன் 2 ஸ்பாட்டில் காஜல்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், விவேக், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில்  கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

தொடர்ந்து நடிகர் விவேக்கின் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது ஆகிய காரணத்தால் இவர்களுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கமல், ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். முன்னதாக இந்தப்படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிந்த நிலையில், திருமணம், குழந்தை என அவரும் சென்றுவிட்டதால், அவருக்கு பதிலாக தீபிகா படுகோன் நடிப்பதாக தகவல் வெளியானது. 

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

ஆனால் இதனை மறுத்த அவர் தான் மீண்டும் இந்தியன் 2 இணைவதாக தெரிவித்தார்.  இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது. குழந்தை பெற்ற பிறகு காஜல் அகர்வாலும்  குண்டாகிவிட்டதால், படத்திற்கு ஏற்றவாறு உடலை மாற்ற அவர் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2  படப்பிடிப்பிற்காக குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டிருப்பது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், “ கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வேலைக்குள் நுழைந்திருக்கிறேன். மீண்டும் கீறலில்  இருந்து தொடங்குவது போல உணர்கிறேன். என்னுடைய உடல் எப்போதும் நான் பயன்படுத்துவது போல இல்லை. குழந்தை பிறப்புக்கு முன்னால் அதிக நாட்கள் உழைக்க முடிந்ததோடு, என்னால் அதிகமான வேலைகளையும் செய்து, ஜிம்மில் சென்று உடற்பயிற்சியும் செய்ய முடிந்தது. ஆனால்  குழந்தை பிறகு அப்படி இல்லை. என்னுடைய பழைய எனர்ஜியை மீட்டெடுக்க கடினமாக இருக்கிறது. குதிரை மீது ஏறி, தனியாக அமர்ந்து சவாரி செய்வதே தற்போது பெரிய வேலையாக தெரிகிறது. 

இந்தியன் 2 அப்டேட்: 

இந்தியன் 2  வில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்த வேலையில் புதிதாக திறன்களை கற்றுக்கொண்ட எனக்கு பின்னாளில் அது பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தத் துறையில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இதனை என்னுடைய வீடு என்றே அழைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget