Kaithi: டில்லி சீக்கிரமா வரப்போறான்.. கைதி மேக்கிங் வீடியோவில் கைதி 2 ஹிண்ட்.. செம அப்டேட் தந்த தயாரிப்பு நிறுவனம்!
பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கப்பட்ட திரைப்படம் கைதி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்கள் பல கோலிவுட் தாண்டி பிரபலமடைந்து வருகின்றன. பாலிவுட் இன்னும் தேய்ந்துபோன பழைய கதைகள் மற்றும் ரீமேக் படங்களை மட்டுமே எடுத்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியா மட்டுமின்றி இந்தி திரையுலகையும் அதிரவைத்த தமிழ் படம் ஒன்றை பற்றிதான் பார்க்க இருக்கிறோம்.
கைதி:
நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' திரைப்படம் சரியாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியானது. இந்த திரைப்படம் 25 அக்டோபர் 2019 அன்று வெளியானது. இந்த படம் வெளியானபோது, தமிழ் திரையுலகில் புதிய அலையை உருவாக்கியது, புதிய பரிமாணத்தையும் பெற்றது.
டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தி சிறையில் இருந்து வெளிவரும் ஒரு கைதி, இவர் தனது மகளை சந்திக்க முயற்சிக்கும்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அவர் தனது மகளை சந்திக்கும் முன் இந்த பிரச்னையை சமாளிக்க வேண்டும். இந்த கதை அனைத்தும் ஒரே இரவில் நடந்து முடிக்கும் கதையும் உருவாக்கப்பட்டது. இதுவே கதையின் கரு.
The scenes where this BGM is placed in the Kaithi indicates the anger, aggression, violence.. All the emotions in his mind that has been suppressed in Dilli for ten years is coming out 🔥#Kaithi2 വിൽ SAMcsനെ replace ചെയ്ത് അനിയെ കൊണ്ടുവരരുത് എന്നാണ് അഭിപ്രായം🤞🏻🙂 pic.twitter.com/cWBPflx4yY
— Aji Mathew 🦉 (@Mathewsputhren) October 25, 2023
இந்தப் படத்தில் முன்னணி நடிகை இல்லை. இது தமிழ் திரையுலகில் முதன்முறையாக நடந்தது. அதேபோல், ஆக்ஷன் சார்ந்த இயக்குனரான லோகேஷ் கனகராஜின் இந்தப் படத்தில் எந்தப் பாடலும் இல்லை. இந்தப் படம் பாடல்கள் ஏதும் இல்லாமல் பிஜிஎம் வைத்தே வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
கைதி திரைப்படம் மொத்தம் 25 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சுமார் 87 கோடி ரூபாய் வசூலித்தது. அதேசமயம், இந்த படம் பெரும் வசூலை ஈட்டி ரூ.106 கோடியை வசூலித்தது.
இச்சூழலில் கைதி படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியஸ் 'கைதி’ படத்தின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் கார்த்தி சண்டைக் காட்சிகளுக்காக படும் மெனக்கெடுதல், படத்தின் கேமரா வொர்க்ஸ், ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஒளிப்பதிவு, லாரி சீன்கள் என அனைத்தையும் 1.30 நிமிடங்களுக்கு காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை கைதி படத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
We thank and love you all for making #Kaithi very special and memorable ♥️🙏 #4YearsOfKaithi
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 25, 2023
Here’s #KaithiBTS
Hold your expectations for lifetime settlement #Kaithi2 @Karthi_Offl @itsNarain @iam_arjundas @SamCSmusic @sathyaDP @philoedit @ArtSathees @anbariv @Dir_Lokesh… pic.twitter.com/yIdjqcwNYU
மேலும், இந்த வீடியோவின் கடைசியில் டில்லி விரைவில் வருவான் என்று குறிப்பிடப்பட்டும் இருந்தது. இதன் காரணமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரைவில் ’கைதி-2’ திரைப்படத்தின் அப்டேட்களையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.