KVRK OTT Release Date: ஓடிடியில் கலக்கலாக வருகிறார்கள் கண்மணி, கதிஜா... ஹாட்ஸ்டார் வெளியிட்ட தேதி இதுதான்!
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பிரபலங்கள் சிலரும் படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கினார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்னையிலே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
View this post on Instagram
திரையரங்குகளை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எப்போது ஒடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகின்ற மே 27 ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. அதில், இதோ மே 27 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்மணிபிளஸ் கதிஜா என்று குறிப்பிட்டுள்ளது.
Here we go, #KanmaniPlusKhatija on #DisneyPlusHotstar from May 27.. ❤💚#LoveyouTwo #KaathuvaakulaRenduKaadhal @VijaySethuOffl @VigneshShivN @Samanthaprabhu2 #Nayanthara @anirudhofficial @7screenstudio @Rowdy_Pictures #KRK pic.twitter.com/RaPOL42Ncv
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 18, 2022
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இதை வித்தியாசமாக அறிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் குரூப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான ரேம்போ வருகிறார். அடுத்ததாக கண்மணி, கதிஜா இணைகின்றனர். தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்து படத்துக்கான ஒடிடி அறிவிப்பை வெளியிடுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்