K.S.Ravikumar | இரு இடைவேளை விடச்சொன்ன ரஜினி... திட்டித்தீர்த்த கமல்... படையப்பா ரிலீஸ் குறித்து மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
‛காட்சிகள் அனைத்தும் செமையாக இருக்கிறது, படத்தின் காட்சிகளை நீக்க வேண்டாம் , இரண்டு இடைவேளை விட்டு விடலாம். என்று ரஜினி கூறினார்... ஆனால் கமல்...‛
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களுள் இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படங்களுள் ஒன்று படையப்பா. பொதுவாக ரஜினி மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாக , மற்றொரு மாஸ் நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் ரஜினிக்கு வில்லனாக நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி , தமிழ் சினிமாவில் புரட்சி செய்திருப்பார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த படம் வெளியான சமயங்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்றளவும் கொண்டாடப்படுகிறார். ஆனால் படையப்பா வெளியான 1999 ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டாராம். அந்த அளவிற்கு ரஜினியை வேறு யாரும் ஆன் ஸ்கிரீனில் மிரட்டியதில்லை என்பதால் , ரசிகர்கள் சில இடங்களில் திரையரங்கின் ஸ்கீரினையே கிழித்துவிட்டார்கள் .. இதனால் ரம்யா கிருஷ்ணன் பயந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
சமீபத்தில் படம் குறித்து ரீக்கால் செய்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், படையப்பா படம் வெளியாவதற்கு முன்னதாக எடிட் செய்து வந்த பொழுது 19 ரீல்ஸ் இருந்திருக்கிறது. அப்பெடியென்றால் படம் மிகவும் நீண்ட படமாக இருந்திருக்கிறது. படத்தை பார்த்த ரஜினிகாந்த் காட்சிகள் அனைத்தும் செமையாக இருக்கிறது, படத்தின் காட்சிகளை நீக்க வேண்டாம் , இரண்டு இடைவேளை விட்டு விடலாம். சமீபத்தில் வெளியான இந்தி படத்தில் கூட இதனை செய்திருக்கிறார்கள் என்றாராம். ஆனால் தொடர்ந்து ரவிக்குமார் தயங்கவே, கமல்ஹசனை அழைத்து அட்வைஸ் கேட்டிருக்கிறார் ரஜினி. கமல்ஹாசன் உடனே “ பைத்தியமா நீ!.. தமிழ் படத்திற்கெல்லாம் அது தாங்காதுப்பா.. எனக்கு இயக்குநர் குறித்து நல்லா தெரியும் அதை நீ அவர்கிட்டயே விட்டுடுப்பா ..” என அறிவுரை கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் அதை கே.எஸ்,ரவிக்குமாரிடம் கூறினாராம். உடனே சில காட்சிகளை நீக்கினாராம் . அந்த காலத்தில் நவீன எடிட்டிங் தொழில்நுட்பம் இருந்திருந்தால் நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் டெலிட்டட் சீன்ஸாக விட்டிருப்பேன் என வருந்துகிறார் ரவிக்குமார்.
நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே கதைக்கு தேவைப்பட்டலும் ,அதிக தேவை இல்லாத்தால்தான் நீக்கினாராம். செந்தில் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “போட்டுருக்க சட்டை என்னுது “ என்னும் காமெடி போல மற்றொரு காமெடியையும் எடுத்திருந்தார்களாம் அதனை நீக்கிவிட்டாராம். சித்தாரா வயதான பிறகு பொண்ணு கேட்கும் சீன் , நீலாம்பரியிடம் முதன் முறையாக படையப்பா அவமானப்படுத்தப்பட்ட பிறகு ரஜிகாந்த் அதனை நினைத்து தனியாக படுத்துக்கொண்டு வேதனையுறுவது போன்றும் , சௌந்தர்யா அவருக்கு ஆறுதல் சொல்வது போன்ற காட்சிகளை கிரேன் செட்டப்பில் இரவில் கோயிலில் எடுத்தார்களாம் . அதனை நீக்கிவிட்டார்களாம்.மணிவண்ணன் மற்றும் அவரது மகன்கள் செய்யும் அட்டூழியங்களையும் அதனை ரஜினி கண்டுபிடிப்பது போன்ற காட்சிகளையும் பெரிய சீனாக எடுத்தார்களாம் அதுவும் வேண்டாம் என நீக்கினாராம் இயக்குநர். இதனை அவரே பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் டெலிட்டட் சீன்ஸ் மட்டும் இருந்தா எப்படி கொண்டாடியிருப்போம் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்