கண்ட நாள் முதல் இயக்குநருடன் கைகோர்க்கும் ஜோதிகா?
கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ப்ரியா ஜோதிகாவுக்கு கதை ஒன்றை கூறியிருக்கிறார்
தமிழ் சினிமாவில் வாலி படம் மூலம் அறிமுகமானவர் ஜோதிகா. அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தன. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் ஜொலித்தார்.
மொழி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்த சமயத்தில் அவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தார்.
இதனையடுத்து 36 வயதினிலே திரைப்படம் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஜோதிகா கதைக்கு முக்கியத்துவம் படங்களைத் தேர்ந்தெடுத்தது பலரது பாராட்டை பெற்றது. அவரது 50ஆவது படமான உடன்பிறப்பே வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதற்கிடையே ஜோதிகா இமயமலை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் சென்றார். அந்தப் பயணத்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து ஜோதிகா தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் உருவானது.
View this post on Instagram
அதன்படி, கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ப்ரியா ஜோதிகாவுக்கு கதை ஒன்றை கூறியிருக்கிறார். ப்ரியா சொன்ன கதை ஜோதிகாவிற்கு பிடித்துபோய்விட்டதாகவும் அதில் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்