OTT Release: OTT ஃபேன்ஸா நீங்க ! - இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ!
நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
என்னதான் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கலெக்ஷனில் சக்கைப்போடு போட்டாலும் கூட , ஓடிடி தளங்களில் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து தனி ரசிகர்கள் பட்டாளமே காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த மாதம் (ஜூன் ) ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள மற்றும் வெளியாகியுள்ள திரைப்படம் மற்றும் வெப் தொடர்களை காணலாம்.
டான் :
இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் மாணவனாக நடிக்க , சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த திரைப்படம் ஜூன் 10 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
View this post on Instagram
9 ஹவர்ஸ்:
நந்தமுரி தாரகரத்னா, மதுஷாலினி, அஜய் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 9 ஹவர்ஸ் ஒரு தெலுங்கு வெப் தொடராக உருவாகியுள்ளது.இந்தத் தொடரில் ரசிகர்களின் விருப்பமான மனி ஹீஸ்ட் வெப் தொடர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் Disney+ Hotstar இல் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஜன கன மன :
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய ஒரு சஸ்பென்ஸ் லா த்ரில்லர். இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
சுழல் :
தி வோர்டெக்ஸின் பின்னணியில் இரட்டை இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள சுழல் திரைப்படத்தை பிரம்மா மற்றும் அனுசரண் எம் இயக்குகின்றனர். விசாரணை திரில்லராக உருவாகியுள்ள இந்த தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஆர் பார்த்திபன் மற்றும் ஸ்ரீயா ரெட்டி நடித்துள்ளனர். படம் இந்த மாதம் அமேசான் பிரைமில் ஜூன் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
View this post on Instagram