Pulimada: கல்யாண கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்...ஜோஜூ ஜார்ஜை கரம் பிடிப்பாரா..புலிமடா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார்.
நடிக்கும் கதாபாத்திரங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் வல்லவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். பெரும்பாலும் மலையாள படங்களே நடத்திருந்தாலும், சில தமிழ் படங்களிலும் நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றவர். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள புதிய படம் புலிமடா. இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கல்யாண கெட்டப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்:
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.கே.சஜன், புலிமட படத்தை எழுதி, இயக்கி, எடிட்டிங்கும் செய்துள்ளார்.
ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்து உள்ளனர். இயக்குநர் ஜோஷி மற்றும் ஜோஜூவின் ஆண்டனி படமும் ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மலையாள படம்:
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த "இரட்டா" படத்துக்குப் பிறகு ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் அடுத்த படம் ‘புலிமடா’. இப்படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா.
தமிழில் சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமடா படத்திலும் லிஜோமால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா, பாலச்சந்திர மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமணமும், அது தொடர்பான நிகழ்வுகளும், அவரது குணாதிசயத்திலும், வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களும் புலிமடா மூலம் பார்வையாளர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன. தலைப்பிற்கு ஏற்றாற்போல், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளார் இயக்குநர் ஏ.கே.சஜன்.
தற்போது வெளியாகியுள்ள புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பெயரிலும் வடிவமைப்பிலும் வித்தியாசமாக உள்ளது. எனவே, ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இஷான் தேவ் இசையமைக்க, பின்னணி இசை அனில் ஜான்சன் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் - வினீஷ் பங்களா செய்துள்ளார்.