மேலும் அறிய
Advertisement
Jigarthanda Double X Box office Collection: ஒரே வாரத்தில் சத்தமில்லாமல் பல கோடிகளில் வசூலை வாரி குவித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் ரூ.30 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jigarthanda Double X Box office Collection: ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் ரூ.30 கோடியை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கடந்த 10-ஆம் தேதி ரிலீசானது. இளம் தலைமுறை இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் கார்த்திக் சுப்புராஜ், தனக்கான தனி ஸ்டைலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் தீபாவளியை ஒட்டி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கருப்பு நிறம் கொண்ட ஒருவர் ஹீரோ ஆகிறார் என்ற ஒன்லைன் கான்சப்டையும், பழங்குடி மக்களின் வாழ்வில் அரசு இயந்திரம் செய்யும் அவலங்களையும் வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க பழங்குடி மக்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்து பேசுவதுடன், ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைத்துள்ளன. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரைப் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டி தள்ளினார். இது மட்டுமில்லாமல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.
ரசிகர்கள், திரை பிரபலங்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பில் வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் குறித்து சாக்னிக் நிறுவனம் வெளியிட்ட தகவலில், படம் ரிலீசான ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.30 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
*Jigarthanda Double X Day 7 Afternoon Occupancy: 17.57% (Tamil) (2D) #JigarthandaDoubleX https://t.co/1kIEw9cl7k*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) November 16, 2023
படம் ரிலீசான முதல் நாளில் ரூ. 2.96 கோடியும், 2வது நாளில் ரூ.5.21 கோடியும், 3வது நாளில் ரூ.7.4 கோடியும், 4வது நாளில் ரூ.7.25 கோடியும், 5வது நாளில் ரூ.3.4 கோடியும், 6வது நாளில் ரூ.1.9 கோடியும் என வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏழாவது நாளான இன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மொத்த வசூல் ரூ.30 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதனால், படக்குழு இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது.
மேலும் படிக்க: Rajnikanth: “நூறு சதவிகிதம் கப்பு நமதே” - சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion