Jhanvi Kapoor vs Sridevi Kapoor: அதே புடவை... அதே கலர்... அதே ஸ்டில்... அன்று ஸ்ரீதேவி... இன்று ஜான்வி!
நடிகை ஸ்ரீதேவி 1989ம் எடுத்த புகைப்படமும் ஜான்வி கபூர் 2022ம் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஜான்வி.
![Jhanvi Kapoor vs Sridevi Kapoor: அதே புடவை... அதே கலர்... அதே ஸ்டில்... அன்று ஸ்ரீதேவி... இன்று ஜான்வி! Jhanvi Kapoor vs Sridevi Kapoor in Black saree Jhanvi Kapoor vs Sridevi Kapoor: அதே புடவை... அதே கலர்... அதே ஸ்டில்... அன்று ஸ்ரீதேவி... இன்று ஜான்வி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/13/9422f138ff14800654964d43fc6088ed1663055515702107_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். அதில் ஒரு புறம் ஜான்வியும் மறுபுறம் நடிகை ஸ்ரீதேவியும் ஒரே மாதிரியான கருப்பு நிற புடவையில் இருப்பது போன்ற புகைப்படம் அது. இருவருக்கும் இடையில் எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க நாம் நினைத்தால் ஒன்றை கூட நம்மால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தாய் - மகள் இருவரும் அச்சு அசலில் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்.
தாயை பின்பற்றும் ஜான்வி :
ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் தனது தாய் தான் ஒரு முன்னுதாரணம். சிறு வயது முதலே தனது தாயை பார்த்து இடுப்பில் துப்பட்டாவில் புடவையை கட்டிக்கொண்டு சேலை கட்டி மகிழ்கிறார்கள். அதே போல தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூரும் தனது குழந்தைப்பருவத்தில் இருந்த உணர்ச்சியை போல் இப்போதும் தனது அம்மாவின் புடவையை அணிவதை அல்லது அவரைப் போலவே உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை ஜான்வி பகிர்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த வகையில் நடிகை தற்போது ஸ்ரீதேவி 1989ம் எடுத்த புகைப்படமும் ஜான்வி கபூர் 2022ம் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஜான்வி. அதை பார்த்தால் நமக்கு அன்று தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியை தான் நினைவூட்டுகிறது.
Jhanvi Kapoor & Sridevi Kapoor. pic.twitter.com/1MoQjdudnc
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 13, 2022
ஸ்ரீதேவி அதிர்ச்சியான மரணம்:
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல அனைத்து மொழி படங்களிலிலும் நடித்து புகழின் உச்சியை தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை 1996-ல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீ தேவி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது துரதிர்ஷ்டவசமாக காலமானார் என்பது குறிப்பிடதக்கது.
அம்மாவோடு ஒப்பிடுதல் :
நடிகை ஜான்வி கபூர் ஒவ்வொரு முறை பேசும் போது தனது அம்மா பற்றி பேசாமல் இருந்ததில்லை. ஏற்கனவே தனது அம்மா சினிமா துறையில் தான் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பல விஷயங்களை தன்னோடு பகிர்ந்து கொண்டதை கூறியுள்ளார். அம்மா நடித்த 300 படங்களோடு நான் நடித்த சில படங்களை ஒப்பிடுவார்கள். அதனால் அதை பற்றி எல்லாம் நான் கவலை படாமல் என்னுடைய அம்மாவின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன் என சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது கூறியிருந்தார் ஜான்வி கபூர்.
❤️! pic.twitter.com/ttIyQH440y
— Janhvi Kapoor (@janhvikapoorr) March 3, 2018
திரையில் அறிமுகம் :
நடிகை ஜான்வி கபூர் முதலில் நடித்த திரைப்படம் தடக். மராத்தி மொழி திரைப்படமான சாய்ரட் எனும் வெற்றி படத்தின் ஹிந்தி திரைப்படம் தடக். இந்த திரைப்படம் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் ஜான்வி. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் சாய்ரட் அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு வித்தியாசமான முயற்சியில் உருவான திரைப்படம். தனது தாய் அளவிற்கு இல்லை என்றாலும் தனது சிறப்பான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களை கவந்தார் ஜான்வி. நிச்சயமான மயிலின் இடத்தை மயிலின் மகள் பிடிப்பாள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)