மேலும் அறிய

Jayam Ravi: இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஜெயம் ரவி பிசி! படங்கள் பட்டியலை பாருங்க!

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரும் பிப்ரவரி 16ம் வெளியாக இருக்கும் சைரன் படத்தை தொடர்ந்து, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி அடுத்தடுத்து பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிகவும் சவாலான கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. 

Jayam Ravi: இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஜெயம் ரவி பிசி! படங்கள் பட்டியலை பாருங்க!

'சைரன்' பிரஸ் மீட் :

இருப்பினும் அதன் தொடர்ச்சியாக சைக்கோ திரில்லர் ஜானரில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்பமே நடிகர் ஜெயம் ரவிக்கு அற்புதமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோரின் நடிப்பில் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'சைரன்'. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

டபிள் ஆக்ஷன் :

சமீபத்தில் 'சைரன்' படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கோண ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தனர்.  அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்களத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக ஆக்ஷன் மற்றும்  திரில்லர் படங்களில் கவனம் செலுத்தி வந்த ஜெயம் ரவி இப்படத்தில் ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

Jayam Ravi: இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஜெயம் ரவி பிசி! படங்கள் பட்டியலை பாருங்க!

அடுத்தடுத்த ஷெட்யூல் :

ஜெயம் ரவி 'சைரன்' படத்தை தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்து வருகிறார். காதலை மையமாக வைத்து வெளியாக இருக்கும் இந்த ரொமான்டிக் படத்தில் அவரின் ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு பிஸி :

மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 திரைப்படம் மட்டுமின்றி பிரதர், ஜீனி, ஜனகனமன என வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி எனவே 2024 மற்றும் 2025ம் முழுவதும் அவரின் வெரைட்டியான ஜானர் படங்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.  

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget