Jawan: ராமய்யா வஸ்தாவையா.. ஜவான் படத்தின் மூன்றாவது பாடல்.. விரைவில் ட்ரெய்லர்... கலக்கல் அப்டேட் கொடுத்த ஷாருக்!
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'ராமையா வஸ்தாவையா' பாடலின் டீசர் வெளியாகி இருக்கிறது.
ஜவான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “நாட் ராமையா வஸ்தாவய்யா” பாடலின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவான்
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் திரைப்படம் ஜவான். தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன்முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார். தனது முதல் படமே ஷாருக்கானை வைத்து எடுத்திருப்பதால் இந்தியா முழுவதும் ஜவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ போல் முதன்முதலாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அனிருத், ஜவான் படத்த்துக்கு இசை அமைத்துள்ளார்.
ஜவானில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜவான் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருவதை ஒட்டி ப்ரோமோஷன் வேலையாக டீசர், மோஷன் போஸ்டர்ஸ், பாடல் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டது. கடந்த மாதம் இறுதியில் வெளியான ஷாருக்கானின் வந்த எடம் பாடல் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நாட் ராமையா வஸ்தாவையா
Ok guys time to go make the trailer as everyone wants that. @TSeries & @anirudhofficial & @Atlee_dir had wanted to put out song. Will leave a teaser now….& get @AntonyLRuben to work on trailer. Song is….Not …Ramaiya Vastvaiya. Bye for now love u all. #Jawan pic.twitter.com/zb9Zsq9bJr
— Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023
ஜவான் திரைப்படத்தில் ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தன. அனிருத்தின் அதிரடி இசை மற்றும் குரலுடன் ஷாருக்கானின் நடனத்துடன் வந்த எடம் பாடலை தெறிக்கவிட்டது. சில நாட்களுக்கு முன்பு வந்த எடம் பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது படக்குழு.
தற்போது ஷாருக்கான், நயன்தாராவின் ரொமாண்டிக் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. ஹையோடா என்ற பெயரில் வெளியான பாடலில் அழகில் அள்ளும் நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான ‘நாட் ராமையா வஸ்தாவையா’ என்கிற பாடலின் டீசர் வெளியாகி இருக்கிறது.