Jawan Box Office: 9 நாளில் ரூ.735 கோடி வசூல்.. ஆஸ்திரேலியாவிலும் சாதனை... பாக்ஸ் ஆஃபீஸை புரட்டிப்போட்ட ஜவான்!
பாலிவுட் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகுமே ஆவலுடன் காத்திருந்தது.
குறிப்பாக ஷாரூக்கானின் ‘பதான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் அதிகமாகவே இருந்தது. படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார் ஷாரூக். படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
View this post on Instagram
இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய வெளியான ஜவான் திரைப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் நேற்றுடன் அதாவது செப்டம்பர் 15ஆம் தேதி வரை மொத்தம் 735.02 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பாலிவுட் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டு இருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இதற்கு முன்னர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் செய்திருந்தது.
அதேபோல், உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் முதல் காட்சி ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழு மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் குறைவைக்காமல் வாரி குவித்துக்கொண்டு உள்ளது.
இந்த படத்தை ஷாருக்கானே தயாரித்துள்ளார். படத்தினை உருவாக்க மொத்தம் ரூபாய் 300 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாரூக்கானுக்கு ரூபாய் 100 கோடி சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாயகி கதாபாத்திரமான நர்மதா ராய் கதாபாத்திரத்தை நடித்த நயன்தாராவுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வில்லன் கதாப்பாத்திரமான காலீ கெய்க்வாட் கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ரூபாய் 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தினை இயக்கிய இயக்குநர் அட்லிக்கு ரூபாய் 55 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
Jawan: அட்லீ நீங்க டான்ஸரா மாறிடுங்க.. ஜவான் படத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி.. வைரல் வீடியோ இதோ..!